நிதி திரட்டுவதை இலக்காகக் கொண்டு சிறுவர்களை வர்த்தகத்தில் ஈடுபடுத்தும் குழுக்கள் பற்றி கண்டறிவதற்காக விசேட குழுக்கள் நாடு முழுவதும் நியமிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சிறுவர்களை அவர்களின் பெற்றோரும், பாதுகாவலர்களும் தொழிலில் ஈடுபடுத்த முடியாது எனவும் சில இடங்களில் பிள்ளைகளுக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளதாக அவர்களை அழைத்துச் சென்று நிதி திரட்டும் மோசடிகளும் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் செயற்படும் குழுக்கள் இது பற்றி விசாரணைகளை முன்னெடுக்கவிருப்பதாகவும் இவ்வாறான சம்பவங்கள் பற்றி அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது 1929 என்ற இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யலாம் எனவும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

Share The News

Post A Comment: