புத்தள முஸ்லிம்களுக்கு நன்றி கூறும் பாயிஸ்; அதிரடி அபிவிருத்திகள் இனி ஆரம்பம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

புத்தள முஸ்லிம்களுக்கு நன்றி கூறும் பாயிஸ்; அதிரடி அபிவிருத்திகள் இனி ஆரம்பம்

Share This


அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்.
நடந்து முடிந்த நகர சபைத் தேர்தலில் நமது வெற்றி, புத்தளம் நகரின் வெற்றியாகும். இங்கு வாழும் ஒட்டுமொத்த மக்களின் வெற்றியாகும். அதனால், நமது நகரின் தன்மானம் காக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
அமைச்சு அதிகாரத்தைம், கோடிக்கணக்கான பணத்தையும் பிரயோகித்து நமது மக்களின் தன்மானத்தை விலைக்கு வாங்க பிரயத்தனம் செய்த அமைச்சருக்கும், அவரது கைக்கூலிகளுக்கும் புத்தளம் மக்கள் பாடம் புகட்டியுள்ளனர். அதனால், புத்தளத்தில் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.
இத்தேர்தலில் நாம் மரச்சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டு 8336 வாக்குகளைப் பெற்றோம். ஆனால், நமது எதிரணியான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூட்டணி அமைத்து மூவாயிரம் சிங்கள வாக்குகளுடன் 8754 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி + அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் + சிங்கள வாக்குகள் = 8754
இதில், ஆசனங்களின் எண்ணிக்கை சமமாக இருந்தாலும், நகரின் 11 வட்டாரங்களில் 7 வட்டாரங்களை நாம் வெற்றிகொண்டதானது, நமது நகரின் பெரும்பாலான மக்கள் நம்மை தேர்தெடுத்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வெற்றியை நமதூருக்களித்த இறைவனுக்கே புகழ் அனைத்தும். அல்ஹம்துலில்லாஹ்.
அரசியலில், இன்றைய சூழ்நிலையை சரியாகப் புரிந்து கொண்டு தைரியமாக முடிவெடுத்து மரத்திற்கு வாக்களித்த அத்தனைபேரும் இந்த வெற்றியின் பங்காளிகளாகும். நமது பங்காளிகள் அத்தனை பேருக்கும் நமது தனிப்பட்ட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றௌம்.
நமது வெற்றிக்காக நோன்பிருந்த, பிரார்த்தனை புரிந்த உலமாக்கள், பெரியோர்கள், தாய்மார்கள், சகோதர – சகோதரிகள், இளைஞர்கள், மாணவர்கள் அத்தனை உள்ளங்களுக்கும் நமது உளமார்ந்த நன்றிகள்.
இத்தேர்தல் பிரச்சாரத்தின் ஆரம்பம் தொட்டு, நமக்குஅரனாக இருந்து, நம்மைக்காத்து நின்று, நமக்கு புதுத்தெம்பை ஊட்டி வெற்றி வரை அழைத்துச் சென்ற போராளிகள், மாணவர்கள், இளைஞர்கள், சின்னஞ்சிறார்கள் அத்தனை பேருக்கும் நமது நன்றிகள் கோடி….
இத்தேர்தலில், நமக்காக தனிப்பட்ட பிரச்சாரங்களைச் செய்து நமது வெற்றிக்கு உதவிய தமிழ் பேசும் பிற மதங்களின், மதத் தலைவர்கள், சகோதர, சகோதரிகளுக்கும் நமது இதயம் கனிந்த நன்றிகள்…
நன்றி.
அன்புடன்,
கே.ஏ.பாயிஸ்.

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE