கொழும்பில் ஈரான் தூதுவரின், வீட்டில் தீ!கொழும்பில் அமைந்துள்ள ஈரான் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பு மா நகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இத் தீ பரவலுக்கான காரணமோ சேத விபரங்களோ இது வரை வெளியாகவில்லை . இத் தீ விபத்து தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பில் ஈரான் தூதுவரின், வீட்டில் தீ! கொழும்பில் ஈரான் தூதுவரின், வீட்டில் தீ! Reviewed by NEWS on February 12, 2018 Rating: 5