தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Feb 1, 2018

ஜனாதிபதின் வவுனியா வருகையை முன்னிட்டு வவுனியா சு.க பிரதான கட்சி காரியாலயத்தில் கலந்துரையாடல்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் எதிர்வரும் 5ம் திகதி வவுனியாவுக்கு வருகை தருவதை முன்னிட்டு செய்யவேண்டிய ஏற்பாடுகள் பற்றிய முன்னேற்பாட்டுக் கூட்டம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வன்னிப்பிராந்திய பிரதம அமைப்பாளருமான கெளரவ காதர் மஸ்தான் தலைமையில் தற்பொழுது இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் வன்னி மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு போட்டியிடும அனைத்து வேட்பாளர்களும் சமூகமளித்திருப்பதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வடபிராந்திய மத்திய குழுவினரும் கலந்து சிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Post Top Ad

Your Ad Spot

Pages