அல்குர்ஆன் முழு வாழ்க்கை முறையையும் எமக்கு கற்றுத் தந்திருக்கிறது. இந்நிலையில் முஸ்லிம் தொடர்பில் சிங்களவர்கள் மத்தியில் ஹக்கீமும் றிஷாத்தும் பிழையாக பேசுகின்றனர். இவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மருதமுனையில் இடம்பெற்ற கூட்டத்தில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றுகையில்

அல்குர்ஆன் நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறது. முழு வாழ்க்கையிலும் நம்பிக்கை விசுவாசம் இருக்க வேண்டும். இது இவ்வாறு இருக்க ஹக்கீம் றிஷாத் போன்றவர்கள் சிங்கள மக்களிடத்தில் முஸ்லிம் மக்களை பிழையாக பேசுகின்றார்கள். இங்கு முஸ்லிம் மக்களிடத்தில் வந்து சிங்களவர்களை பிழையாக சொல்லி பிரிக்கின்றார்கள்.

சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் முஸ்லிம்களை பிழையாக சித்தரிக்கின்றார்கள். இதற்கு மாற்றமாக நாம் அனைவரும் தமிழ் முஸ்லிம் சிங்களம் என்ற வேறுபாடு இல்லாமல் ஒற்றுமையாக வாழ வேண்டும். என்று மக்களிடத்தில் கேட்டுக் கொண்டார்.

இதன்போது மருதமுனையில் சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கட்டப்பட்ட வீட்டுத் திட்டத்தை உடனடியாக மக்களுக்கு வழங்குவதற்கான மகஜரும் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்காவிடம் வழங்கப்பட்டது.

ஏ.எல்.எம். ஷினாஸ்

Share The News

Post A Comment: