தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Feb 5, 2018

ஊழல்வாதிகளை மீளவும் ஆட்சி அதிகாரத்தில் அமர்த்த மாட்டோம்!ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு மக்கள் அதிகாரத்தை வழங்க மாட்டார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஊழல், மோசடிகளின் மூலம் பணம் சம்பாதித்த நபர்களை மக்கள் மீளவும் ஆட்சியில் அமர்த்த மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஊழல் மோசடிகளின் மூலம் மக்கள் பணத்தை கொள்ளையிட்டவர்கள் மீளவும் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து கொள்ள பிரயத்தனம் செய்கின்றார்கள். மக்கள் இந்த முயற்சிகளை முறியடிப்பார்கள் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்

Post Top Ad

Your Ad Spot

Pages