ஜா-எல தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து


FILE IMAGE
ஜா-எல, ராஜமாவத்தையில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு குறித்த தொழிற்சாலையில் தீப்பரவியதுடன் தீயணைப்பு படையினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளின் முயற்சியில் தீ அணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தீ விபத்தில் உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. இச்சம்பவம் தொடர்பாக ஜா-எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...