முஆத் ஏ.ஹமீட்

தேர்தல் என்கிற விடயம் தாண்டி மக்களுக்கு சிறந்த சேவை மற்றும், சமூக நலன் விருந்தோம்பல், மக்கள் நலன்,கல்வியறிவு மார்க்கப்பற்று, இறை பக்தி என அனைத்து குணங்களிலும் சிறந்த ஒருவராக புறத்தோட்ட வட்டார வேட்பாளர் கித்ர் மாஸ்டர் காணப்படுகிறார் இவரை விட தகுதியான ஒருவர் இருப்பின் எமது மக்கள் அவர் பின்னால் செல்ல தயாராக உள்ளனர், அப்படி ஒருவரும் இல்லை என முன்னாள் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் ஏ.சி. நியாஸ் குறிப்பிட்டுள்ளார்.

சிலோன் முஸ்லிம் ஊடகத்திற்கு பிரத்தியேக பேட்டியளித்த போதே இதனை தெரவித்தார்,

நாம் சிந்திப்பதற்கான நேரம் இது, எந்தவொரு வட்டாரத்திலும் நான் மேற்சொன்ன திறமைகளுடன் ஒருவர் இருந்தால் அவரை தெரிவு செய்யுங்கள், அட்டாளைச்சேனை புறத்தோட்ட வட்டாரத்தில் கித்ர் மாஸ்டரை விட ஒரு அநுபவசாலியை நீங்கள் தேடவேண்டியதில்லை, எமது வட்டாரத்தை சிறந்த முறையில் முன்னேற்ற வேண்டிய தேவையுள்ளது அதற்கு தகுந்த ஒருவர் மாஸ்டர்தான் என குறிப்பிட்டார்.

Share The News

Post A Comment: