தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Feb 23, 2018

மீண்டும் விகிதாசார முறைப்படி தேர்தல்?மாகாணசபைத் தேர்தல்களை விகிதாசார முறைப்படியே நடத்துவது குறித்து. ஐக்கிய தேசியக் கட்சி ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  உள்ளூராட்சித் தேர்தல்களின் போது கடைப்பிடிக்கப்பட்டது போன்ற, கலப்பு முறையிலான தேர்தல் முறையை மாகாணசபைத் தேர்தல்களின் போதும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

50 வீத உறுப்பினர்களை தொகுதி முறையிலும், 50 வீத உறுப்பினர்களை விகிதாசார முறையிலும் தெரிவு செய்யும் வகையில் புதிய கலப்பு தேர்தல் முறையை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்காக மாகாணசபைகளுக்கான தேர்தல் தொகுதிகளை வரையறை செய்வதற்கான குழுவொன்றும் அமைக்கப்பட்டு அதன் அறிக்கையும் பெறப்பட்டுள்ளது.

அதேவேளை, புதிதாக உள்ளூராட்சித் தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்ட கலப்பு தேர்தல் முறையினால், ஆளும் கட்சிகள் தோல்வியைத் தழுவியுள்ள அதேவேளை, இந்த தேர்தல் முறை குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனால், ஏற்கனவே நடைமுறையில் இருந்த விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைப்படியே தேர்தலை நடத்துவது குறித்து ஐ.தே.கட்சி ஆராய்ந்து வருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post Top Ad

Your Ad Spot

Pages