பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி முத்தலாக் மசோதாவுக்கு ஆதரவு தர வேண்டும் என்று அனைத்து அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கோரிக்கை வைத்தார். பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே இந்த மசோதா நிறைவேறி விட்டால் அதுவே இஸ்லாமிய பெண்களுக்கான புத்தாண்டு பரிசாக இருக்கும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

பாராளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடையே பேசிய பிரதமர்  மத்திய அரசின் முயற்சிகளும் பொதுமக்களின் விருப்பமும் இருந்தாலும் கூட குளிர்கால பாராளுமன்ற கூட்டத் தொடரில் முத்தலாக மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை என்று கூறினார்.

Share The News

Post A Comment: