தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Feb 6, 2018

சாட்சி வழங்க நான் தயார் நீங்கள் தயாரா?ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பில் விசாரணை நடாத்த நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சி வழங்க தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று கட்டுநாயக்க பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழு நியமிப்பதாக பொய்யான கருத்துக்களை கூறுவதாகவும், நியமித்தால் தாம் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்க தயாராக இருப்பதாகவும் அனைத்து தொழிற்சங்கங்களும் சாட்சி வழங்குவார்கள் எனவும், இந்த ஊழல்களை யார் செய்தார்கள் என தமக்கு தெரிந்துகொள்ள வேண்டி இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் விமானங்களை கொண்டுவருவதனை நிறுத்தி அதற்கு நஷ்டஈடு செலுத்தியதாகவும் குறித்த நஷ்டஈட்டு பணத்தினால் இரண்டு விமானங்களை கொண்டு வந்திருக்க முடியும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post Top Ad

Your Ad Spot

Pages