தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Feb 16, 2018

வேட்பாளர் முஸ்தபா முஹம்மட் வபாவின் வீட்டின் மீது தாக்குதல்; கண்ணாடியும் உடைப்பு
க்கரைப்பற்று பிரதேச சபை பட்டியல் வேட்பாளர் முஸ்தபா முஹம்மட் வபாவின் வீட்டின் மீது இன்று இன்ந்தெரியாத நபர்கள் சிலர் தாக்குதல் நடாத்தியுள்ளனர்,

வேட்பாளர் முஸ்தபா முஹம்மட் வபா சம்பவம் நடந்த இடத்திலிருந்து மயிரிழையில் தப்பித்து சென்றுள்ளார், இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அக்கரைப்பற்று பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டின்  கண்ணாடி, கதவுகள், என்பன சேதமாக்கப்பட்டுள்ளது, மின்சாரமும் துண்டிக்க செய்யப்பட்டிருந்தது. மர்ம நபர்கள் சிலர் முகத்தில் துண்டுகளை கட்டிய வண்ணம் வந்திருந்தாகவும் குறிப்பிட்டார்.

அத்தோடு இந்த விடயத்தினால் வபா மிகவும் மனமுடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்ட அவர் அக்கரைப்பற்றில் மாத்திரமின்றி இலங்கையில் முஸ்லிம் இளைஞர்களால் அரசியல் செய்வது இக்காலத்தில் மிகவும் அச்சுறுத்தல் மிக்கதும், கடினமானதெனவும் , உண்மைக்கு வாழ்வு இல்லை என்றும் குறிப்பிட்டார்.Post Top Ad

Your Ad Spot

Pages