தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Feb 7, 2018

கைச்சின்னத்திற்கு வாக்களித்து இந்நாட்டை கட்டியெழுப்ப முன்வாருங்கள் - பொத்துவிலில் ஜனாதிபதி


கைச்சின்னத்திற்கு வாக்களித்து இந்நாட்டைக் கட்டியெழுப்ப முன்வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொத்துவில் பிரதேசத்தில் சிறி லங்கா சுதந்தரிக் கட்சியில் பொத்துவில் பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முனனால் அமைச்சர் ஏ.எல.எம்.அதாவுல்லா அவர்களின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறி லங்கா சுதந்திரக் கட்சி சிங்கள மக்களுக்குரிய கட்சியல்ல, அது அனைத்து இன மக்களுக்குமுரிய தேசியக் கட்சியாகும். காலஞ்சென்ற ஜனாதிபதி பண்டாரநாயக்கா சுதந்திரக்கட்சியில் 03 செயலாளர்களை நியமித்திருந்தார் அதில் தமிழ், சிஙகள் முஸ்லீம் ஆகிய மூவரை நியமித்திருந்தார். உலகில் உள்ள மத்திய கிழக்கு நாடுகளில் அதிக நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள் காலஞ்சென்ற பண்டாரநாயக்கவும் சிறிமா பண்டாரநாயக்காவுமே ஆகும். 1963ம் ஆண்டு இலங்கையிலிருந்த வெளிநாட்டு எண்ணை நிறுவனங்களை மக்கள் மயப்படுத்தினார்.

அன்று அமெரிக்காவிற்கும், இங்கிலாந்திற்குமுரிய நிறுவனங்கள் எல்கோ கேஸ் என்ற பெயரிலே தான் இருந்தது. சிறிமா பண்டாரநாயக்கா அம்மாயார் அவர்கள் வெளிநாட்டு எண்ணை நிறுவனங்களை அரச மயப்படுத்தும் போது வெளிநாட்டவர்கள் சொன்னார்கள் எங்களது எண்ணை நிறுவனங்களில் கை வைக்க வேண்டாமென்று கூறிய போது அன்றைய எகிப்துடைய ஜனாதிபதி நஷhர் அவர்கள் கூறினார்கள் எங்களது எண்ணை நிறுவனங்களை அரச மயப்படுத்துங்கள் நாங்கள் தருகின்றோம் என்று கூறினார்.

சிறி லங்கா சுதந்திரக் கட்சி சர்வதேச ரிதீயில் குறிப்பாக இஸ்லாமிய நாடுகளுடன் நெருக்கமான உறவை வைத்திருந்தது. இது தான் எனது கட்சியினுடைய வரலாறு. எங்களுடயை இக்கட்சியில் சில கட்சிகள் சேர்ந்து இருக்கின்றன. முன்னால் அமைச்சர் அதாவுல்லாடன் குதிரைச் சின்னத்தில் போட்டியிடுகின்றோம், தொண்டமானுடன் சேவல் சின்னத்தில் போட்டியிடுகின்றோம். அதே போல் நாட்டின் சில பகுதிகளில் கைச் சின்னத்திலும், இன்னும் சில இடங்களில் வெற்றிலைச் சின்னத்திலும் போட்டியிடுகின்றோம். எனவே, எந்தச் சின்னத்திலும் போட்டியிட்டாலும் அது எங்களது சுதந்திரக் கட்சிக்கே கிடைக்கின்றது.

நாம் எல்வோரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாகப் பணிபுரிய வேண்டும். பிரதேச சபைக்கு நல்ல உறுப்பினர்களை நீங்கள் தெரிவு செய்து கொள்ள வேண்டும். அவர்கள் நன்றாக வேலை செய்ய வேண்டும், அவர்களுக்குரிய வேலைத்திட்டத்தை நான் செய்து கொடுப்பேன். நீங்கள் அவர்களை வெற்றி பெறச் செய்வதன் மூலம் அவர்கள் உங்களது பிரதிநிதியாக இருப்பது போன்று அவர்கள் எனது பிரதிநிதியாகவும் இருப்பார்கள் என்பதைக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். உங்களது பகுதியில் உள்ள பிரச்சினைகளை அபிவிருத்திகளை மேற்கொள்ள அவர்களூடாக பணத்தை ஒதுக்கித் தருவேன். 

மேலும் உங்களுடைய பிரதேசத்தில் சில சில பிரச்சினைகள் இருக்கின்றது, அது எனக்கு நன்றாகத் தெரியும், பொத்துவில் பிரதேசத்தை அபிவிருத்தியடைச் செய்ய வேண்டுமென்றால் அது நாட்டினுடைய சுற்றுலாத்துறையைய் மேம்படுத்த வேண்டும். உங்களுக்கு மாத்திரமல்ல எமக்கு அனைவருக்குமுரிய ஒரு சொத்து தான் எமது நாட்டினுடைய கடல் வளம். எனவே, பொத்துவில் பிரதேசத்தை நாம் ஒரு சுற்றுலாப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்த வேண்டும். சுதந்திரக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதன் பின்னர் உங்களது பிரதேசத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த எல்லாவற்றையும் பெற்றுக் கொடுப்பேன்.

உங்களது ஊரில் உள்ள ஹெட ஓயாப் பிரச்சினையை தீர்பபதற்காக அறிக்கைகளை சமர்ப்பித்து சாத்தியக்கூறு அறிக்கைகளைப் பெற்றுக் கொண்டிருக்கின்றோம். அறிக்கை கிடைத்ததும் நிதியனை வழங்கி திட்டத்தை ஆரம்பிக்கவிருக்கினறோம். மேலும் எனக்குத் தெரியும் உங்களுக்கு இன்னும் ஒரு சின்ன வேலை செய்ய வேண்டியிருக்கின்றது அது தான் உங்களுக்கு ஒரு விளையாட்டு அரங்கு தேவைப்படுகின்றது. நான் நினைத்தேன் பொத்துவில் பிரதேசத்தில் நிறைய விளையாட்டு மைதானம் இருக்குமென்று, இப்பகுதியில் நன்றாக விளையாடக்கூடிய திறமையான வீரர்கள் இருக்கின்றார்கள், அவர்களுக்கு நல்லதொரு விளையாட்டு அரங்கு நிச்சயமாகத் தேவை. எமது நாட்டில் சிறந்த விளையாட்டு வீரர்கள் உருவாகிக் கொண்டு வருகின்றார்கள்.

அந்த விளையாட்டு துறையைப் பார்க்கின்ற போது எந்தவொரு இனப்பாகுபாடும் இருக்கப் போவதில்லை. விளையாட்டுத் துறை என்பது இனங்களுக்கிடையில் உறவைக் கட்டியெழுப்புகின்ற முறை, தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தான் இந்த விளையாட்டுத் துறை எனவே தான் உங்களுக்கு விளையாட்டு அரங்கை மிக விரைவில் பெற்றுக் கொள்வதற்கான நிதியினை நான் ஒதுக்கித் தருகின்றேன்.

மேலும் உங்களது பிரதேசத்தில் கல்வி வலயம் தொடர்பான பிரச்சினையொன்றும் உள்ளது. அதனை மாகாண கல்வி அமைச்சு மத்திய கல்வி அமைச்சுடன் பேசி தீர்த்து தருகின்றேன். கிழக்கு மாகாணத்தில் பட்டதாரிகளின் பிரச்சினையும் உள்ளன. நாங்கள் வேலையில்லா பட்டதாரிகளுக்கு இரண்டு முறையில் விண்ணப்பங்கள் கோரியிருந்தோம்.

தேசிய ரிதீயிலும், மாகாண ரிதீயிலும் ஆனனால் தேர்தல் நடவடிக்கை ஆரம்பித்து ஒன்றரை மாதங்களால் அதனை செய்ய முடியவில்லை. தேர்தல் காலங்களில் அரச நியமனங்களோ, காணி உறுதியோ அல்லது எந்தவொரு அபிவிருத்தியோ மேற்கொள்ள முடியாது. அது தேர்தல் இலஞ்சமாகக் கருதப்படும். இத் தேர்தல் முடிந்ததும் கிழக்கு மாகாணத்திலுள்ள வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போஹல்லாகம அவர்களுக்கு கூறியுள்ளேன். அதற்குத் தேவையான நிதியை நான் அவருக்கு அனுப்பி வைப்பேன். எங்களுக்கு எதிராக வேலையில்லா பட்டதாரிகளைப் பற்றி பேசுகிறன்ற கட்சிகளுக்குப் பின்னால் செல்ல வேண்டிய அவசியம இல்லை.

 நீங்கள் பல்கலைக்கழகம் சென்று நன்றாக் படித்தவர்கள், இவர்களுக்குப் பின்னால் செல்ல வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு வேலை வாயப்பு வழங்குவது அரசாங்கத்தினுடைய கடமையாகும். எமது நாட்டின் அவிருத்திகள் பிரதேச சபை ஊடாக மாத்திரம் செய்யப்படுவதில்லை. மாகாண சபைகள் ஊடாகவும், அரசாங்கத்தின் ஊடாகவும் மேற்கொள்ளப்படுகின்றது. குறிப்பாக படித்த இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் இந்நாட்டினுடைய பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்.

எதிர்வரும் 10ம் திகதி இடம்பெறவுள்ள தேர்தலில் நாங்கள் முழு நாட்டிலும் வெற்றி பெறுவோம். இந்நாட்டில் யார் நல்லவர்கள் யார் கேட்டவர்கள் என்று மக்களாகிய உங்களுக்கு நனறாகத் தெரியும். முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ என்ன செய்தார் என்றும் உங்களுக்குத் தெரியும். அவர்களுக்கு இந்த கிராம சபைகளில் கூட வாக்களிப்பதற்கு யாரும் தயாரில்லை.  அவர்கள் நினைக்கின்றே மாதிரி அரசாங்கத்தை உருவாக்க முடியாது.

ராஜபக்ஸவுடைய ஆட்சியைப் பற்றி இன்னும் மக்கள் மறந்து விடவில்லை. அவர்கள் களவு, இலஞ்சம் போன்றவற்றிற்கு நல்ல திறமைசாலிகள். அதே போல் இந்த அரசாங்கத்திலும் சிலர் களவாடுகின்றார்கள் அது உங்களுக்குத் தெரியும் தானே. அவர்களுக்கும் நாங்கள் தண்டனை வழங்குவோம்.

மத்திய வங்கி கொள்ளையில் இருக்கினறவர்களும் முன்னையவர்களும் அகப்பற்றிருக்கின்றார்கள் என்பது உங்களுக்குத் தெரியும் என்று நான் சொல்லவில்லை அந்த ஆணைக்குழுவில் அறிக்கை சொல்லுகின்றது. சென்ற வாரம் நான் இன்னுமொரு புதிய ஆணைக்குழுவை ஆரம்பித்தேன், அது எமது விமான நிலையத்தில் ஏற்பட்டிருக்கின்ற களவு இலஞ்சம் பற்றி ஆராய்வதற்காக. அந்த ஆணைக்குழு இந்நாட்டில் இருக்கின்ற  கள்வர்கள் யார் என்பதைச் சொல்வார்கள். சட்டம் அனைவருக்கும் பொதுவானது. தவறு செய்த அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும். மத்திய வங்கி கொள்ளை தொடர்பில் கடந்த நாட்களில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டள்ளனர்.

 முனானல் ஜனாதிபதியினுடைய ரஷ்ய தூதுவராக இருந்தவரை துபாய் நாட்டின் விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர். அந்தக் காலத்தில் குடும்ப ஆட்சி எப்படி மயமாக்கப்பட்டிருந்தது உங்களுக்குத் தெரியும். ராஜபக்ஸவுடைய ஒரு மச்சான் ரஷ;யாவில் தூதுவராகவும், இன்னுமொரு மச்சான் அமெரிக்காவில் தூதுவராகவும் இருக்கின்றார், இன்னுமொரு மச்சான் சிறி லங்கா விமான நிலையத்தில் தலைவராக இருந்;தார். நான் உங்களிடம் கொஞ்சத்தைத் தான் சொன்னன், மிகுதி ஒரு பட்டியலே இருக்கின்றது. குடும்ப ஆட்சிக்கோ களவு இலஞசம் ஊழலுக்கெதிராக நான் பயமின்றி நடவடிக்கை எடுப்பேன். பெப்ரவரி 10ம் திகதி வாக்குச் சாவடிக்குச் சென்று கைச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முன்னால் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா, இராஜாங்க அமைச்சர்.எம்.எல்.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போஹல்லாகம, வட மாகாண ஆளுனர் ரெஜினோல் குரே, சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர். ஏ.எம்.அப்துல் மஜீத், வேட்பாளர்கள் மற்றும் பல்லாயிரக் கணக்கான மக்களும் கலந்து கொண்டனர்.

எம்.எஸ்.சம்சுல் ஹுதா, 
பொத்துவில்

Post Top Ad

Your Ad Spot

Pages