அரச நிர்­வாகம் மற்றும் முகா­மைத்­துவ அமைச்சின் தாப­ன­விதிக் கோவையின் XII ஆம் அத்­தி­யா­யத்தின் 12பிரிவின் 12:1உப­பி­ரி­வின் ­மீ­ள­மைக்­கப்­பட்­ட ­சுற்­று ­நி­ரு­பத்தின் பிர­காரம், அர­சாங்க நிறு­வ­னங்­களில் பணி­பு­ரியும் முஸ்லிம் ஊழி­யர்கள் வெள்ளிக் கிழ­மை­களில் ஜும்ஆத் தொழு­கையை நிறை­வேற்­ற­வென வழங்­கப்­பட்ட விசேட சலு­கைக்கு வழி­விட வேண்­டு­மென அரச நிறு­வ­னங்­களின் அதி­கா­ரி­க­ளுக்கு கண்­டிப்­பான உத்­த­ரவை வழங்­கு­மாறு அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் அந்த அமைச்சின் செய­லா­ளரை வேண்­டி­யுள்ளார்.
முஸ்லிம் அரச ஊழி­யர்கள் வெள்­ளி­கி­ழ­மை­களில்,  தமது மதக் கட­மை­களை அனுஷ்­டிக்கும் வகையில் 12.00 மணி தொடக்கம் 02.00 மணி வரை வழங்­கப்­பட்ட விசேட விடு­மு­றைக்கு அனு­ம­தி­ய­ளிப்­ப­தற்கு சில அதி­கா­ரிகள் மறுப்புத் தெரி­விப்­ப­தா­கவும் எனவே அவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட இந்த விசேட சலு­கைக்கு இட­ம­ளித்து, மதக்­க­ட­மை­களை சீராக நிறை­வேற்­று­வ­தற்­காக அதி­கா­ரி­க­ளுக்கு மீண்டும் சுற்­று­நி­ருபம் தொடர்பில் அறி­வு­றுத்­து­மாறு அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் அந்த அமைச்சின் செய­லா­ள­ருக்கு கடிதம் ஒன்றின் மூலம் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.
கிழக்கு மாகாணம் உட்­பட நாட்டின் ஏனைய பிர­தே­சங்­களில் உள்ள முஸ்லிம் அரச அலு­வ­லர்கள் வெள்­ளிக்­கி­ழமை ஜும்ஆத் தொழுகை நேரத்தில் தமது கட­மையை ஒழுங்­காக நிறை­வேற்ற முடி­யாமல் இருப்­ப­தா­கவும் அரச அதி­கா­ரிகள் இதற்கு அனு­மதி மறுப்­ப­தா­கவும் அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீ­னிடம் முஸ்லிம் அரச  ஊழி­யர்­கள்­ சுட்­டிக்­காட்­டி­யதை அடுத்தே, அமைச்சர் இந்தக் கடி­தத்தை அரச நிர்­வாகம் மற்றும் முகா­மைத்­துவ அமைச்சின் செய­லா­ள­ருக்கு எழுதி­யுள்ளார்.
முஸ்­லிம்­களைப் பொறுத்­த­வ­ரையில் ஜும்ஆத் தொழுகை மிகவும் கட்­டாயக் கடமை எனவும் எனவே, அவர்­களின் மதக் கட­மை­களை அனுஷ்­டிக்கும் வகையில் அரச நிர்­வாகம் மற்றும் முகா­மைத்­துவ அமைச்சு ஏற்­க­னவே வழங்­கிய சலு­கையை சில அதி­கா­ரிகள் மறுக்­கின்­றனர் எனவும், வேறு சில அதி­கா­ரிகள் இந்த விட­யத்தில் மெத்­தனப் போக்கை கடைப்­பி­டித்து வரு­வதால், முஸ்லிம் அரச ஊழி­யர்கள் வேதனை அடைந்­துள்­ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், தனியார் துறையினரும் முஸ்லிம்களின் சமய வழிபாட்டின் முக்கியத்து வத்தை உணர்ந்து, இந்த விசேட சலுகையை வழங்குவதை உறுதிப்படுத்து மாறும் அமைச்சர் கோரியுள்ளார்.

Share The News

Post A Comment: