தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Feb 5, 2018

சபாநாயகருடனான சந்திப்பில் பாராளுமன்றம் செல்லும் முன்னாள் சுகாதார அமைச்சர் நஸீர்
பைஷல் இஸ்மாயில் 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நாளை செவ்வாய்க்கிழமை (06) சத்தியப் பிரமாணம் செய்யவுள்ள கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்த அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.முஹம்மட் நஸீருக்கும்  சபாநாயகருக்குமிடையிலான சந்திப்பு இன்று அவரது காரியாலயத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின்போது, நாளை பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதன் பின்னர் அவர் தொடர்பான முக்கிய ஆவனங்கள் கையளிக்கும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.    
கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்த ஏ.எல்.முஹம்மட் நஸீரின் சேவை இன, மத, மொழி போன்ற வேறுபாடுகளுக்கப்பால் கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்ட மக்களுக்கும் இன்றியமையாத சேவையாக காணப்பட்டு வந்தது.


அந்த வகையில், நாளை செவ்வாய்க்கிழமை (06) பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து அவருடைய சேவையை நாளை முதல் முழு இலங்கைக்குமான சேவையாக அமையவுள்ளது என்பதை இச்சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்த விருப்புகின்றேன்.

Post Top Ad

Your Ad Spot

Pages