தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Feb 6, 2018

கம்பஹாவில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி


கம்பஹா கெஹெல்பத்தர பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை மோட்டார் சைக்கிளில் வருகை தந்த அடையாளம் தெரியாத இரு நபர்கள் துப்பாக்கிசூட்டை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காண நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து உயிரிழந்துள்ளார். கெஹெல்பத்தர, உடுகம்பள பகுதியை சேர்ந்த 65 வயதுடைய நபர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் சந்தேக நபர்களை கைது செய்வதற்காக மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Post Top Ad

Your Ad Spot

Pages