Feb 19, 2018

குழப்பத்தை ஏற்படுத்தி தன்னுடைய இயலாமையை மறைக்க ஜனாதிபதி முயற்சி!



கடந்த ஜனாதிபதி தேர்தலில்  62 லட்சம் மக்களின் வாக்குகளைப் பெற்று தெரிவான  ஜனாதிபதி மைற்றியினால் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அவர் சார்ந்த கட்சியினூடாக 15 லட்சம் வாக்குகளைக்கூட  பெறமுடியவில்லை,அதே நேரம் தனது பொலநறுவை மாவட்டத்தைக் கூட அவரால் வெற்றியடைய முடியவில்லை,இந்த தேர்தல் பெருபேறுகளின் படி  நாட்டு மக்களால் அவர் தெளிவாக  நிராகரிக்கப்பட்டுள்ளார்.

இந்த உண்மைகளை மூடிமறைத்துவிட்டு 32% வாக்குகளைப் பெற்ற பிரதமர் ரணிலை பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்ரி அவர்கள் கோருவது எந்தவகையில் நியாயமாகும் என்பதே கேள்வியாகும்

உண்மையிலேயே பதவி விலக வேண்டியவர் ஜனாதிபதி மைத்ரி அவர்கள்தான்,அவருக்குத்தான் மக்கள் தண்டனை வழங்கியுள்ளனர் என்பதே யதார்த்தமாகும்.

தான் சகல அதிகாரம் பொருந்திய ஜனாதிபதியாக இருந்துகொண்டு, நாட்டிலே நடந்த அத்தனை குற்றங்களையும் கண்டும் காணாதவர்போல்  இருந்துவிட்டு, கடைசியில் விடயங்கள் எல்லாம் வெளியேவந்து  நாற்றமெடுக்க தொடங்கியபோதுதான்,அதுவரை ஒன்றுமே அறியாதவர் போலும், இப்போதுதான் விடயத்தை அறிந்தவர் போலும், அதன்பிறகு விசாரணை நடத்தி உண்மையை கண்டுகொண்டவர் போலும் அவர் நடந்து கொண்ட விதமானதை,நாட்டு மக்கள் ஒருகாலும் ஏற்றுக்கொள்ள தயாரில்லாத நிலையைத்தான் இந்த தேர்தல் முடிவுகள் எடுத்துக்கூறியுள்ளன.ஆகவே அந்தளவுக்கு அவருடைய நிலைமை படுமோசமாக இருந்ததையிட்டு நாட்டு மக்கள் கவலை கொள்ளாமல் என்ன செய்வார்கள்.

கடந்த காலங்களிலெல்லாம் நாட்டில் நடக்கும் அத்தனை விடயங்களுக்கும் அன்று பதவியிலிருக்கும் ஜனாதிபதிகளே வகை சொல்லக்கூடியவர்களாக இருந்தார்கள்

அவர்கள்தான் நாட்டில் நடக்கும் அத்தனை  நண்மை தீமைகளுக்கும் வகைசொல்லக்கூடியவர்களாகவும் இருந்தார்கள்ஆனால் இந்த ஜனாதிபதி அவர்கள் மட்டும் பொம்மை போன்று இருந்து கொண்டு, அந்த ஜனாதிபதி பதவியின் அந்தஷ்த்தையே கேள்விக்குட்படுத்துவது போன்று நடந்து கொண்டால் யார்தான் இதனை நம்புவார்கள்.

ஆகவே மக்கள் தண்டனை வழங்கியது ஜனாதிபதி மைத்ரி அவர்களுக்கேதான் என்பதே உண்மையாகும்.அதனால் தனது தவறை உணர்ந்து கொண்டும்.மக்களின் என்னத்தைப் புரிந்து கொண்டும்,தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டியவர் ஜனாதிபதி மைத்ரி அவர்கள் என்பதே உண்மையாகும்.

எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை.
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post