தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Feb 16, 2018

பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை


19 அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தாலும் பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இல்லை என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் 1978ம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்தனவின் அரசியலமைப்பில் கடிதம் ஒன்றை அனுப்பி பிரதமரை பதவி விலக்குவதற்கான அதிகாரம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு இருந்ததாகவும் எனினும் 19வது திருத்த சட்டத்தின் படி அந்த அதிகாரம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி குறித்த அதிகாரம் பிரதமரிடமே காணப்படுவதாகவும் அவர் தான் தனது பதவி விலகல் கடிதத்தை வழங்க வேண்டும் எனவும் இது தான் பிரதமர் ஒருவரை மாற்றுவதற்கு 19வது திருத்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முறையாகும் என்றும் அமைச்சர் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post Top Ad

Your Ad Spot

Pages