தேசிய அரசாங்கம் தொடரும் – கபீர் ஹஷீம்


தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் ஐக்கிய தேசிய கட்சிக்குள் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹஷீம் தெரிவித்துள்ளார்.
கட்சித்தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தற்போதைய நிலைமையில் கட்சித் தலைமையில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...