தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Feb 3, 2018

சாய்ந்தமருதில் இன்று கண்டன கடையடைப்பு

-அஹமது மஹ்தி-

சாய்ந்தமருது மக்களின் உணர்வுகளுக்கும், அபிலாசைகளுக்கும் புறம்பாக இன்று மாலை சாய்ந்தமருதில்
ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் "எழுச்சி மாநாடு" எனும் கூட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்த கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது மக்களின் உள்ளூராட்சிமன்ற அபிலாசையை நிறைவேற்றித் தருவதாக சகல கட்சிகளும் வாக்குறுதி அளித்து இவ்வூர் மக்களை ஏமாற்றியநிலையில், கடந்த 2017 நவம்பர் மாதம் முதல் சாய்ந்தமருது மக்கள் ஊர் பள்ளிவாசலின் தலைமையில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை யாவரும் அறிந்ததே...

அந்த நிலையில், எதிர்வரும் தேர்தலில் இவ்வூர்மக்கள் அனைத்துக் கட்சிகளையும் புறம்தள்ளி ஊரின் ஒற்றுமைக்காக சுயேற்சை அணியில் போட்டியட மேற்கொண்ட தீர்மானத்தையடுத்து, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசைத் தவிர அனைத்துக் கட்சிகளும் சாய்ந்தமருது தேர்தல் களத்தில் இருந்து ஒதுங்கிய நிலையில், மு. கா மட்டும் இவ்வூர் மக்களுக்கும், அவர்களின் புனித பள்ளிவாசலுக்கும் எதிராக தேர்தல் களத்தில் குதித்துள்ளது.

இந்நிலையில் இதற்கு எதிராக சாய்ந்தமருது மக்கள் பல்வேறு எதிர்ப்புகளைக்காட்டி வரும் நிலையில், முஸ்லிம் காங்கிரசானது இன்றைய தினம் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தமது ஆதராவாளர்களை சாய்ந்தமருதுக்கு அழைத்து வந்து தமது பலத்தை வெளியுலகுக்கு நிரூபித்துக்காட்ட எடுக்கும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்த கடையடைப்புப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.

Post Top Ad

Your Ad Spot

Pages