ஹக்கீம் காங்கிரஸ் இழந்தவைகளைகளே கிழக்கின் எழுச்சியின் வெற்றிக்கு சான்று
அம்பாரை மாவட்டத்தின் எந்த ஒரு உள்ளூராட்சி சபையிலும் தனித்து ஆட்சியமைக்கும் திறனை ஹக்கீம் காங்கிரஸ் இழந்திருப்பதே கிழக்கின் எழுச்சியின் முயற்சி வெற்றியளித்தது என்பதற்கு சான்றாகும்.

இவ்வாறு கிழக்கின் எழுச்சியின் செயலாளர் அஸ்ஸுஹூர் சேகு இஸ்ஸடீன் அண்மைய தேர்தல் முடிவுகள் குறித்து வினவியபோது தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,

கிழக்கு மக்களின் வாக்குகளைச் சூறையாடி அம்மக்களைத் தொடர்ந்தேச்சியாக ஏமாற்றி வந்த ஹகீம் காங்கிரஸின் போலி முகத்திரையைக் கிழித்து மக்கள் முன் நிறுத்தியதில் கிழக்கின் எழுச்சி மகத்தான பணியைச் செய்தது.

கிழக்கு வடக்கு முஸ்லிம்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான உருவாக்கப்பட்ட மு.கா. பணம் காய்க்கும் மரமாக மாற்றப்பட்டதோடல்லாது கிழக்குப் புறக்கணிப்பை தொடங்கியபோது கிழக்கின் எழுச்சி உருவானது.

தலைமைத்துவத்தை கிழக்கிற்கு தருமாறு கேட்டோம் அவ்வாறு கிட்டாதவிடத்து கிழக்கு வடக்கில் உள்ள சக்திகளை கூட்டாக இயங்குமாறு வேண்டுகோள் விடுத்தோம்.

இந்த தேர்தலில் மக்கள் எமது நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளனர். மு. கா அம்பாறையில் எங்குமே தனித்து ஆட்சியமைக்க முடியாது போனதுடன், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், மு.கா அதிருப்தி அணி என்பன கூட்டாக ஒன்றிணைந்தால் பல சபைகளை ஆளும் நிலை உருவாகியுள்ளது.

இவர்கள் அனைவரும் முஸ்லிம்களுக்கான அபிவிருத்தி அரசியல்தான் செய்யப்போகிறார்கள் என்றால் தமக்குள் முரண்படுவானேன். வேற்றுமைகளை மறந்து மன்னித்து ஒற்றுமையாக. அம்முயற்சியை மேற்கொள்ளலாமே.

தேசிய ரீதியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உள்வாங்கி முஸ்லிம்களின் உரிமை அரசியலில் பொறுப்பு வாய்ந்த நகர்வுகளை முன்னெடுப்பதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதை கணக்கில் கொள்ளாது முஸ்லிம் தலைமைகள் தமக்குள் பிணங்கிக் கொண்டிருப்பார்களேயானால், பெரும் கைசேதத்திற்குள் உள்ளாக்கப்படுவோம் என்ற எச்சரிக்கை மணியையும் கிழக்கின் எழுச்சி ஓங்கி ஒலிக்கிறது.

ஹக்கீம் காங்கிரஸ் இழந்தவைகளைகளே கிழக்கின் எழுச்சியின் வெற்றிக்கு சான்று ஹக்கீம் காங்கிரஸ் இழந்தவைகளைகளே கிழக்கின்  எழுச்சியின்  வெற்றிக்கு சான்று Reviewed by NEWS on February 12, 2018 Rating: 5