தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Feb 5, 2018

முடியுமானால் நேருக்கு நேர் வாருங்கள் - ஜனாதிபதி சவால்முடியுமானால் நேருக்கு நேர் வந்து கருத்துத் தெரிவிக்குமாறு நாட்டிலுள்ள பிரதான அரசியல் தலைவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.
நேற்று (04) மாலை இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
திருட்டு, மோசடி, ஊழல், வீண்விரயம், துஷ்பிரயோகம் மற்றும் கொலை என்பன தொடர்பில் நேர்மையாக நேருக்கு நேர் வந்து கருத்துத் தெரிவிக்குமாறும் அரசியல் தலைவர்களை ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.
எந்தவொரு அரசாங்கம் வந்தாலும், லஞ்சம், ஊழல், வீண்விரயம் இல்லாதிருந்தால் மாத்திரமே உரிய முறையில் அபிவிருத்திப் பணியை முன்னெடுக்க முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Post Top Ad

Your Ad Spot

Pages