தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Feb 8, 2018

அரசை கவிழ்க்க சதி- ராஜித


விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்படுவதால் தான் முன்னாள் ஜனாதிபதி ஒவ்வொரு பிரதேச சபையாக சென்று அரசை கவிழ்க்க முயற்சி செய்கிறார் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றம்சாட்டியுள்ளார்.
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஒருவரும் மற்றும் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரும் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணை வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகிறது. இதன்படி சந்தேக நபர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் துரிதமாக கைது செய்யப்படவுள்ளார்கள் எனவும் களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post Top Ad

Your Ad Spot

Pages