தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Feb 28, 2018

சிரியா படுகொலையினை கண்டித்து தமிழ் மக்களின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் போராட்டம்சிரியா படுகொலையினை கண்டித்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளை மாபெரும் கண்டப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், இனப்படுகொலைக்கு எதிரான தமிழ் மக்களின் ஏற்பாட்டில் நாளை மறு தினம் காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திலும், மாலை 4 மணியளவில், திருகோணமலை சிவன் கோவிலடியிலும் இடம்பெறவுள்ளது.

இந்த கண்டனப் போராட்டத்தில் தமிழ் மக்கள் அனைவரையும், இனப்படுகொலைக்கு எதிராக குரல்கொடுக்க ஒன்று திரளுமாறு இனப்படுகொலைக்கு எதிரான தமிழ் மக்கள் என்ற அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த இரு தினங்களாக சிரியா நாட்டில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் பெண்கள், படுகொலை கொலை செய்யப்பட்டனர்.

இந்த இனப்படுகொலைக்கு எதிராகவும், பச்சிளம் குழந்தைகளை கொல்வதை ஐ.நா பார்த்துக் கொண்டிருப்பதை கண்டித்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றதாக குறிப்பிடப்படுகின்றது.

Post Top Ad

Your Ad Spot

Pages