Feb 15, 2018

புதிய தேர்தலும் ஏமாற்றமும்!இலங்கயில் நடந்துமுடிந்த தேர்தலில் கலப்புமுறை உலகநாடுகளில் நடமுறையில் இருக்கும் 5 வகையான வேறுபட்ட முறைகளை ஒன்றாகக் கலந்தே செயற்படுத்தப்பட்டது.

அவையாவன:

1-Parallel voting
2-Mixed member proportional
3-Alternative vote plus
4-Dual member proportional
5-Majority bonus

இதன்காரணமாகவே பல சிக்கல்களும் பாதகமாக விளைவுகளும் ஏற்படுத்தியுள்ளது.உண்மையில் குறித்த ஒருவகை கலப்புமுறைக்கு மேலதிகமாக சிலவற்றை உள்ளடக்கியதே தற்போதைய குழப்பநிலைக்கு காரணமாகும்.

நாட்டில் நிலவிய இனமோதல்கள் மற்றும் அளவுமீறிய ஊழலை ஒழிப்பதற்காக தென்ஆபிரிக்கா 2004ல் இந்தக் கலப்புமுறைத் தேர்தலை அறிமுகம் செய்தது.இதன் மூலம் வெற்றியும் கண்டது.

மேலும் Germany,Bolivia,NewZwaland நாடுகளில் பிரதேச அபிவிருத்தி இதன்மூலம் வேகமான வளர்ச்சி கண்டது.இதேநேரம் பிரித்தானியாவின் ஒருபிராந்தியமான Scotlandல் கூட அறிமுகப்படுத்தப்பட்டு பலராலும் வரவேற்கப்பட்டுள்ளது.

வடகிழக்கில் ஊர்காவல்துறை,முசலி,அக்கரைப்பற்று மற்றும் காத்தான்குடி ஆகிய சபைகளில் மட்டுமே தனித்து ஆட்சியமைகும் நிலை உள்ளது.கலப்புத் தேர்தல் முறையானது நிலையானதும் திறமானதுமான நிர்வாகத்திற்கு தடையாக உள்ளது.

போனஸ் ஆசனங்கள் தொடர்பில் குளறுபடி நீடிக்கிறது.வெற்றிபெற்ற கட்சிகள் ஆட்சியமைக்க முடியாமலும்,வெற்றிபெறாமல் போனஸ் ஆசனத்தை வைத்து பெற்ற தோல்வியாளர்களை சாதனயாளர்களாக்கி உள்ளது.

உதாரணமாக:::

NFGG நாடு முழுவதும் எந்த வட்டாரத்தையும் வெற்றிபெறாமல்,கிடைத்த 24,251 வாக்குகளால் 18 போனஸ் ஆசனங்களைப் பெற்றுள்ளது.அதேநேரம் 6இலட்சத்துக்கு மேல் வாக்குகளுடன் பலவட்டாரங்களை வென்ற JVP உடன் ஒப்பிடுகையில் அதிகமாகும்.

கல்கிஸ்ஸ-தெகிவல

தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஐக்கிய தேசியக்கட்சி 36 ஆயிரத்து 85 வாக்குகளை பெற்று 15 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 36 ஆயிரத்து 29 வாக்குகளை பெற்று 14 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

விகிதாசார அடிப்படையில், ஐக்கிய தேசியக்கட்சிக்கு 4 மேலதிக ஆசனங்களும், பொதுஜன பெரமுனவுக்கு 5 மேலதிக ஆசனங்களும் கிடைத்துள்ளன. இதற்கு அமைய இரண்டு கட்சிகளுக்கும் தலா 19 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

அதேவேளை இந்த மாநகர சபைக்கு போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 10 ஆயிரத்து 956 வாக்குகளை பெற்று 6 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

இவ்வாறான நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சியுடனோ அல்லது ஐக்கிய தேசியக்கட்சி, பொதுஜன பெரமுனவுடனோ கூட்டணி சேர்ந்தால் மாத்திரமே மாநகர சபையில் ஆட்சியமைக்க முடியும்.
ஆகவே நாட்டில் தேசிய அரசியல் ஸ்திரமற்ற தன்மையை உருவாக்கி,உள்ளூராட்சி மன்றங்களிலும் இழுபறி நிலையைத் தோற்றுவித்துள்ளது.

உண்மையில் மேற்கத்திய நாடுகளில் பிரதேச மட்டங்களில் இருந்து புதிய மற்றும் ஊழலற்ற தலைவர்களை உருவாக்கவும்,சகல கட்சியினரையும் பிரதேச அபிவிருத்தியில் பங்காளர்களாக செயற்படவுமே இந்த கலப்புமுறைத் தேர்தல் உருவாக்கப்பட்டது.

ஆனால் தனிக்கட்சி மற்றும் நபர்களால் ஊழல்களையும் அதிகாரத் துஷ்பிரயோகத்தையும் செய்கின்ற நமது நாட்டின் கலாச்சாரத்திற்கு இது சிக்கலாக உள்ளது.ஏனெனில் சகலகட்சிகளையும் அரவணைத்து மற்றும் விட்டுக் கொடுப்புடன் செயற்பட நிர்ப்பந்திக்கப்பட்ட முடிவாக உள்ளது.

தாங்களே வெற்றியாளர்கள்,தாங்களே அதிகாரமிக்கவர்கள்,தாங்களே கொந்தராத்தையும்,வசதிகளையும் ஆட்டைபோட வேண்டுமென எந்தக் கட்சியும் நினைக்கவோ,செயற்படவோ முடியாது.இதுதான் நல்லாட்சி அரசாங்கம் நாட்டுக்குச் செய்த பாரிய புண்ணியமாகும்.

பிரதேசத்தை முன்னேற்ற தேர்தலில் நிற்பதாக குரல் எழுப்பிய சகலரும் இன்று தவிசாளர் கேட்டு,சுழற்சி முறை நிபந்தனை வைத்து அடம்பிடிப்பது வேடிக்கையாக உள்ளது.

மக்களுக்கு சேவை புரிவதற்காக தேர்தலில் நின்றவர்கள் கட்சி பேதமின்றி செயற்பட வேண்டும் என்பதே கலப்புமுறைத் தேர்தலில் இலக்காகும்.ஆட்சியை மற்றவர்கள் துணையுடன் எவரும் ஊழல் புரியமுடியாமல் நிர்வாகத்தை நடாத்த வேண்டும் என்பதே கலப்புமுறைத் தேர்தலின் நோக்கமாகும்.

இதனால் தான் தனிநபருக்கான விருப்பு வாக்குரிமை ஒழிக்கப்பட்டு கட்சிகளுக்கு மட்டுமே வாக்களிக்கவும்,சகல வட்டாரங்களுக்கும் ஒப்பீட்டளவில் பிரதிநிநிகள் கிடைக்கும் வகையில் இந்த முறை அமைந்துள்ளது.

ஆகவே சமூக நோக்குடையவர்கள் இணைந்து எந்த சபையிலும் ஆட்சி நடாத்தலாம்.மாறாக ஊழல் மற்றும் உழைப்பதற்காக அரசியலுக்கு வந்தவர்களுக்கு புதிய தேர்தல்முறை ஏமாற்றமே.


SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network