முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாட்டில் மாதம்பையில் ஊடகச் செயலமர்வு - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாட்டில் மாதம்பையில் ஊடகச் செயலமர்வு

Share This


ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாட்டில் நாடு தழுவிய ரீதியில் பாடசாலைகளில்  நடத்தப் பட்டு வரும் மாணவர்களுக்கான ஊடகச் செயலமர்வு வரிசையில் 58வது செயலமர்வு 24 ஆம் திகதி சனிக்கிழமை சிலாபம் கல்வி வலயத்தில் உள்ள மாதம்பை அல் மிஸ்பா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.
21ஆம் நூற்றாண்டில் ஊடகம் எனும் தொனிப் பொருளிலான இந்தச் செயலமர்வு சனிக்கிழமை காலை 9 மணிக்கு முஸ்லிம் மீடியா போரம் தலைவரும் நவமணி பத்திரிகையின் ஆசிரியருமான என். எம். அமீன் தலைமையில் நடைபெறும்.
இரண்டு அமர்வுகளில் இடம்பெறும் அமர்வுகளில் மாதம்பை அல்மிஸ்பா மாணவர்களுடன் அயலில் உள்ள பாடசாலைகளின் மாணவர்களும் பங்கேற்கவுள்ளனர். இந்த அமர்களில் என். எம். அமீன், தர்ஹா நகர் கல்வியியல் கல்லூரியின் முன்னாள் உப பீடாதிபதி கலைவாதி கலீல், விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் எம். பி. எம். பைரூஸ், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சிரேஷ்ட அறிவிப்பாளரும், நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான ஜுனைத் எம். ஹாரிஸ், லேக்ஹவுஸ் நிறுவன தமிழ் வெளியீடுகளுக்கான ஆலோசகர் எம். ஏ. எம். நிலாம் உள்ளிட்ட  வளவாளர்களாக கலந்துகொள்வர்.
மாலையில் அமர்வில் சான்றிதழ் வழங்கும் நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக சிலாபம் நகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ஏ. டபிள்யூ. சாஹுல் அமீன், சிலாபம் வலயக் கல்வி அலுவலகத்தின் உதவி கல்வி பணிப்பாளர் திருமதி அனிதா கமலேந்திரன் (தமிழ் பிரிவு) உட்பட பிரதேச முக்கியஸ்தர்கள், அரசியல் பிரமுகர்கள், பள்ளிவாசல் நிருவாகிகள் பலரும் பங்கேற்றுச் சிறப்பிக்க வருகின்றனர்.

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE