சாட்டோ மன்சூர் நாபீர் பெளண்டேசனுடைய சகல அதிகாரத்தில் இருந்தும் இடை நீக்கம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

சாட்டோ மன்சூர் நாபீர் பெளண்டேசனுடைய சகல அதிகாரத்தில் இருந்தும் இடை நீக்கம்

Share This
ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

சாட்டோ மன்சூர் நாபீர் பெளண்டேசனுடைய சகல அதிகாரத்தில் இருந்தும் இடை நீக்கம்.. உதுமான் கண்டு நாபீர்அதிகாரங்கள் அனைத்தும் இளம் தொழில் அதிபர் சபீக் மெளலவியிடம் கையளிப்பு
கிழக்கிழங்கையினை மையப்படுத்தியும், நாடு தழுவிய ரீதியிலும் தனது சமூக பணியினை விஸ்தரித்துள்ள சமூக சேவைகள் நிறுவனமான நாபீர் பெளண்டேசனின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பதிகாரியாக இருந்த சமூக ஆர்வலரும் பிரதி அமைச்சர் அமீர் அலியின் தீவிர அரசியல் செயற்பாட்டாளருமான சாட்டோ வை.எல்.மன்சூர் குறித்த பதவியிலிருந்தும், அதனோடு சார்ந்த சகல அதிகாரத்திலிருந்தும் இடை நிறுத்தப்பட்டடுள்ளதாக பெளண்டேசனின் இஸ்தாபக தலைவரும், பொறியியலாளருமான உதுமான் கண்டு நாபீர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

கடந்த 24.07.2017 அன்று சம்மாந்துறையில் உள்ள பெளண்டேசனின் காரியாலையத்தில் இடம் பெற்ற நிகழ்வில் சாட்டோ மன்சூருக்கு நாபீர் பெளண்டேசனுடைய கல்குடா தொகுதி அமைப்பாளராகவும், பெளண்டேசனின் இஸ்தாபக தலைவர் பொறியியாளர் உதுமான்கண்டு நாபீருடைய மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளராகவும் நாபீர் பெளண்டேசனினால் உத்தியோக பூர்வமாக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அதற்கு பிற்பட்ட காலங்களில் நாபீர் பெளண்டேசன் சம்பந்தமான முன்னெடுப்புக்களில் சாட்டோ மன்சூருடைய பங்களிப்பானது திருப்திகரமானதாக இல்லாத காரணத்தினால் குறித்த பதவியில் இருந்து சாட்டோ மன்சூரினை இடை நிறுத்தி உள்ளதாக மேலும் தெரிவித்த பொறியலாளர் உதுமான் கண்டு நாபீர்… சாட்டோ மன்சூர் வகித்த பதிகள் அடங்களாக மேலும் பல வேலை திட்டங்களை கல்குடா பிரதேசத்தில் நாபீர் பெளண்டேசன் மூலமாக முன்னெடுப்பதற்காக கல்குடாத் தொகுதி அமைப்பாளராக  இளம் தொழில் அதிபர் எஸ்.சபீக் மெளலவி கடந்த வாரம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த ஊடக அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE