வாக்குரிமை உள்ள முஸ்லீம் மக்கள் அனைவரும் உள்ளுராட்சி தேர்தலில் வாக்களியுங்கள்பாறுக் ஷிஹான்

வட மாகாணத்தில் வாக்குரிமை பெற்று தற்போது இடம்பெயர்ந்து வாழும் முஸ்லீம் மக்கள் அனைவரும் உள்ளுராட்சி தேர்தலில் தமது வாக்குரிமையை பயன்படுத்த முயற்சி செய்ய வேண்டும் என யாழ் கிளிநொச்சி உலமா சபை கிளைத்தலைவர் பி.ஏ.எஸ் சுபியான் மௌலவி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி 10 திகதி ஆரம்பமாகவுள்ள தேர்தல் குறித்து ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

இத்தேர்தலில் அதிகளவான மக்கள் வாக்களிக்க ஆர்வம் கொண்டுள்ளதை ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகின்றது.குறிப்பாக வடக்கு மாகாணத்தில் யாழ் மாவட்டத்தில் இருந்து தற்காலிகமாக இடம்பெயர்ந்து புத்தளம் அனுராதபுரம் நீர்கொழும்பு பெரியமுல்லை சிலாபம் பாணந்துறை மல்வானை பகுதிகளில் சுமார் 150க்கும் மேற்பட்ட வாக்களர்கள் இருக்கின்றார்கள்.

இவர்கள் இத்தேர்தலில் தத்தமது வாக்குகளை செலுத்துவதற்கு முன்வர வேண்டும்.இதற்காக சில தரப்பினர் போக்குவரத்து வசதிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுன்றது.

எனவே மக்களின் தேவைகளை பெற்றுக்கொள்வதற்கும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் அவரவருக்கு விருப்பமான வேட்பாளர்களை தெரிவு செய்வது அனைவரதும் கடமையாகும் என கேட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...