தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Feb 1, 2018

பயங்கரவாதிகளின் தலைவர் பிரபாகரன் எனக் கூறும் ரிசாடின் கட்சியில் வெட்கமில்லாமல் வேட்பாளர்களாக நிற்கின்றார்கள்பயங்கரவாதிகளின் தலைவரே பிரபாகரன் எனப் பேசும் ரிசாட் பதியூதினின் கட்சியில் எமது நண்பர்கள் வெட்கமில்லாமல் வேட்பாளர்களாக நிற்கின்றார்கள்.

அந்த கட்சியில் நின்று கொண்டு “எமது தலைவர் பிரபாகரன்” என்று கூறுகின்றார்கள். இதை எங்கு போய் சொல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் இடம் பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

எனக்கு ஆனந்த சங்கரி ஐயாவின் வரலாறும் தெரியும், சுரேஸ் பிரேமச்சந்திரனின் வரலாறும் தெரியும், சிவசக்தி ஆனந்தனின் வரலாறும் தெரியும்.

எமது தளபதி கேணல் ஜெயத்தின் அப்பாவை கொலை செய்தது யார் என்றும் எனக்கு தெரியும். இவ்வாறான வரலாற்றை கொண்டவர்கள் தான் தற்போது எம்மீது குற்றம் சுமத்துகின்றார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Post Top Ad

Your Ad Spot

Pages