தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Feb 6, 2018

நல்லாட்சியின் மோசடிகளுக்கு ஜனாதிபதியே பொறுப்பு.!


எனது அமைச்­ச­ர­வையில் மோசடி இடம்­பெற்­றது என்றால் நானும் அதில் சம்­பந்­தப்­பட்­டுள்ளேன் என்று தான் அர்த்தம். அதே போன்று தற்­போ­தைய நல்­லாட்சி அர­சாங்­கத்தின் அமைச்­ச­ர­வையில் உள்ள அமைச்­சர்கள் பெரும்­பா­லானோர் மோச­டி­களில் ஈடு­ப­டு­வ­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார். அப்­ப­டி­யென்றால் ஜனா­தி­ப­தியும் இணைந்து தான் அதற்கு பொறுப்பு கூற வேண்டும் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார். 

பொலன்­ன­று­வையில் நேற்று முன்­தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்­பெற்ற தேர்தல் பிர­சா­ரத்தின் போதே அவர் இதனை தெரி­வித்தார். 

அங்கு அவர் மேலும்  உரை­யாற்­று­கை யில், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஒரு நாட்டின் தலைவர் போன்­றல்­லாமல் பொறுப்­பற்ற விதத்தில் செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்றார். ஊழல் மோச­டி­களில் ஈடுபட்­ட­வர்­களை நர­கத்­திற்கு அழைத்து செல்­லாமல் ஓயப்­போ­வ­தில்லை என அதி­க­மாக உணர்ச்­சி­வ­சப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின் றார். அவர் சற்று பொறு­மை­யாக இருக்க வேண்டும். இல்­லை­யெனில் அவ­ரது உடல் நலமே பாதிக்­கப்­படும். 

இப்­போது கூட அவரின் செயற்­பா­டுகள் அவ்­வாறு தான் உள்­ளன. மேடைப் பேச்­சுக்­களின் போது என்ன பேசு­கின்றோம் என்று தெரி­யா­ம­லேயே பேசிக் கொண்­டி­ருக்­கின்றார். அர­சாங்­கத்தால் கடன் பெறப்­பட்­டுள்­ளது. ஆனால் அது பற்­றிய எந்த தக­வலும் இல்லை, அந்த கடன் தொகைக்­கான வேலைத்­திட்­டங்­களும் நடை­பெ­ற­வில்லை எனக் கூறு­கின்றார். அப்­ப­டி­யென்றால் அந்த பணத்­திற்கு என்ன நடந்­தது என ஜனா­தி­பதி தான் கூற வேண்டும். 

என்­னு­டைய அர­சாங்கம் தான் பாரிய கடன்பெற்­றது என இவர்கள் குறை கூறிக்­கொண்­டி­ருக்­கின்­றனர். நான் பெற்ற கடனில் ஆட்­சியை இவர்­க­ளிடம் ஒப்­ப­டைக்கும் போது 70 வீத அபி­வி­ருத்­தியை செய்­தி­ருந் தேன். ஆனால் இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்து மூன்று வரு­டங்கள் பூர்த்­தி­யா­கியும் நான் பெற்­றதை விடவும் அதிக கடனை மாத்­தி­ரமே பெற்­றுள்­ளார்­களே தவிர நூற்­றுக்கு 30 வீத அபி­வி­ருத்தி கூட  மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. 

என்னால் முன்­னெ­டுக்­கப்­பட்ட வேலைத்­திட்­டங்­க­ளையும் நிறுத்­தி­விட்­டார்கள். ஒரு முறை மக்கள் ஏமாந்து விட்டார்கள். மீண் டும் மீண்டும் அவர்களை ஏமாற்ற  முடி யாது. மீண்டும் ஏமாற மக்கள் தயாராகவும் இல்லை. எனவே இம்முறை தேர்தலில் வாக்காளர்களாகிய நீங்கள் சிந்தித்து வாக்க ளிக்க வேண்டும் என்றார்.

Post Top Ad

Your Ad Spot

Pages