கூட்டங்கள் பேரணிகள் நடத்தப்படுதல் ஆகியவற்றிற்கு மறு அறிவித்தல் வரையில் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.

இந்த உத்தரவுகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 2018 உள்ளுராட்சி மன்ற தேர்தலையடுத்து இன்றைய தினத்திலும் நடமாடும் பாதுகாப்பு சேவை , கலகங்களை அடக்குவதற்கான குழுக்கள் , வீதித்தடைப்பாதுகாப்பு முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உள்ளுராட்சிமன்ற தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றுள்ளது. இதன் வெற்றியை அமைதியானமுறையில் மக்கள் மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share The News

Post A Comment: