தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Feb 5, 2018

எமக்கான அரசியல் பாதையில் நடைபயில்வோம் - புத்தளத்தில் எம். பி மஸ்தான்.

எமக்கென்று ஊழல் மோசடிகளற்ற அரசியல் பாதையொன்றுள்ளது. அப்பாதையில் தான் எமது பயணங்கள் நிகழ்கின்றன. இவ்வாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான கெளரவ மஸ்தான் காதர் தெரிவித்தார்.

 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து இன்று புத்தளம் ஹுஸைனியாபுரம், ஆலங்குடா மற்றும் ஹிதாயத்நகர் பகுதிகளில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் பொழுதே இக்கருத்துக்களை அவர் தெரிவித்தார்.

 அவர் தனதுரையில் மேலும் கூறியதாவது. எமக்கு அரசியலில் உழைத்து மாளிகை கட்டவேண்டிய எந்தத்தேவையும் கிடையாது. எமது நோக்கம் மக்களுக்கு சேவையாற்றுவதாகும். அதற்காகவே இரவும் பகலுமாய் ஓடிக்கொண்டிருக்கிறோம். எமது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நோக்கங்களில் இந்த இடம்பெயர்ந்த வடக்கு முஸ்லிம்களின் பாதுகாப்பும் நலன்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

 எமது கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை விலை கொடுத்து வாங்கும் இழிவான நடவடிக்கையை சிலர் செய்ய முற்பட்டுள்ளனர். வேட்பாளர்களை விலைபேசி எமது அரசியல் பயணத்தை முடக்க முற்படுபவர்களை கண்டு நாம் அஞ்சி அரசியலை விட்டு நாம் ஒதுங்கி ஓடப்போவதில்லை என்பதை அந்த வீரப்புதல்வர்களுக்கு கூறி வைக்க விரும்புகிறேன்.

 அபிவிருத்திகள்,உதவிகள்.என வாக்குகளை குறி வைத்து மூளைச்சலவை செய்யும் அரசியல் வாதிகளும் தங்களது சுயரூபத்தை காட்டத் தொடங்கியுள்ளனர். இவர்களையிட்டு நாம் அவதானமாக இருக்கவேண்டும். இவர்களது பசப்பு வார்த்தைகளுக்கு மயங்கி ஏமாறாமல் மிகவும் நிதானமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது. ஆகவே நாம் இம்முறை எமது வாக்குகளை கைச்சின்னத்துக்கு வழங்கி எமது வாழ்வை எதிர்காலத்தை சிறப்பாக்க முயலவேண்டும். எனவும் குறிப்பிட்டார்.

 ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. ​

Post Top Ad

Your Ad Spot

Pages