தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Feb 7, 2018

காதலுக்கு உதவிசெய்யும் ரணில் - கிண்டலடிக்கும் மஹிந்த
பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட கருத்தினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கிண்டலடித்து பேசியுள்ளார். நாட்டின் அரசியல் தலைவர்கள் மக்களுக்கு நகைச்சுவைகளை வழங்கி வருவதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கந்தளாய் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிரதமர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியிட்ட கருத்தினை தான் செவிமடுத்ததாக மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர் யுவதிகள் காதலிப்பதற்கு இலவச வை-பை அவசியம் என பிரதமர் குறிப்பிட்டார். அதற்கு முன்னர் பசியை போக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு உள்ளதாக மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

Post Top Ad

Your Ad Spot

Pages