Feb 17, 2018

இழுபறிநிலை தொடருமானால் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் – சுமங்கல தேரர் எச்சரிக்கை!


உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுக்குப் பின்னர் நாட்டில் ஏற்­பட்­டி­ருக்கும் ஸ்திர­மற்ற நிலை தொட­ரு­மாயின் அரச நிர்­வாகம் பல­மி­ழந்து நாட்டில் பொரு­ளா­தார வீழ்ச்சி ஏற்­ப­டு­வ­தற்கு இட­முள்­ள­தாக மல்­வத்து மகா­நா­யக்க தேரர் திப்­பட்­டு­வாவே ஸ்ரீ சுமங்­கல தேரர் தெரி­வித்­துள்ளார்.
ஜனா­திபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­விற்கு அவர் அனுப்­பி­யுள்ள கடி­தத்­தி­லேயே இவ்­வி­ட­யத்தைக் குறிப்­பிட்­டுள்ளார். அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­வது,
நாட்டில் தளம்பல் நிலை­யற்ற ஸ்திர­மான ஆட்­சியை முன்­னெ­டுக்க வேண்­டிய பொறுப்பு அர­சாங்­கத்­திற்கு உள்­ளது. எனினும் தேர்­த­லுக்குப் பின்னர் இடம்­பெறும் நிகழ்­வுகள் மக்­களின் அன்­றாட வாழ்க்­கையில் இடை­யூ­று­களை ஏற்­ப­டுத்தும் வகையில் உள்­ளன.
எனவே, குறித்த விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்­த­லின்­போது வழங்­கப்­பட்ட வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­பட வேண்டும்.
விசே­ட­மாக விவ­சா­யிகள், தொழி­லா­ளர்கள் மற்றும் நடுத்­தர வர்க்­கத்தின் மீது கவனம் செலுத்தி அவர்­களின் வாழ்­வா­தா­ரத்தை முன்­னேற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும். மேலும் சம­யங்­க­ளுக்­கி­டையில் நல்­லு­றவை ஏற்­ப­டுத்தி சிறந்த கலாசாரத்தையும் உறுதிசெய்து நாட்டில் நிலையான சமாதானத்திற்கு வழிவகுக்க வேண்டும் எனவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post