தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Feb 1, 2018

சில நாட்களுக்கு முன்னரும், தந்தை அழுதார் - ஜனாதிபதியின் மகள் சத்துரிக்காதனது தந்தையான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கண்களில் கண்ணீரை கண்டதாக அவரின் மகள் சத்துரிக்கா சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் பசியை உணரும் போது அதன் வலி தந்தைக்கும் கிடைக்கும். மக்கள் கண்ணீர் விடும் போது எனது தந்தையும் கண் கலங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தந்தையின் கண்ணில் கண்ணீரை கண்டதாக அவரது மகள் குறிப்பிட்டுள்ளார். மொரகஹகந்த நீர்த்தேக்கததில் நீர் விடுவிக்கும் போது பல வருடங்களாக கண்ட கனவு அன்று பலித்ததாக தந்தை குறிப்பிட்டுள்ளார்.

நீர்தேகத்தின் அருகில் ஒரு நாள் தந்தை நடந்து சென்று கொண்டிருக்கும் போது “எனது பிள்ளைகளை விட இந்த நீர்தேகத்தின் மீது நான் அதிக அன்பு வைத்துள்ளேன்” என அருகில் சென்ற நபரிடம் குறிப்பிட்டார் என சத்துரிக்கா தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை செவாகம பிரதேசத்தில் நேற்று -31- நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Post Top Ad

Your Ad Spot

Pages