அகில இலங்கை மக்கள் காங்கிறஸ் கட்சியின் தேர்தல் மேடைக்கு தீ வைப்பு - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

அகில இலங்கை மக்கள் காங்கிறஸ் கட்சியின் தேர்தல் மேடைக்கு தீ வைப்பு

Share Thisகல்முனை மாநகர சபை தேர்தலுக்காக அகில இலங்கை மக்கள் காங்கிறஸ் கட்சியில் வட்டாரம்-2 இல் போட்டியிடும் அல்-ஹாஜ். ஏ.நெய்னா முஹம்மட் அவர்களை ஆதரித்து இன்று 5.30 மணிக்கு கஸ்ஸாலி வீதியில் One day Tailor வீட்டுக்கு முன்னால் நடை பெறவுள்ள தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கான தேர்தல் மேடை இன்று அதிகாலை இனம் தெரியாதவர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ஏ.நெய்னா முஹம்மட் அவர்களை கேட்டபோது,

"எனது வெற்றியை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் இவ்வாறான அநாகரிகமான செயலை செய்துள்ளனர். இந்த அரசியல் கலாசாரத்தை ஒழிப்பதற்காகவே நான் தேர்தலில் களமிறங்கியுள்ளேன்.


எனினும் கூட்டம் நடைபெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாகவும் உரிய நேரத்திற்கு கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE