தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Feb 12, 2018

நாட்டை வந்தடைந்த கோட்டாபய!முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை 8.10 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளார். எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கச் சொந்தமான ஈ.கே. 650 என்ற விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரிய வெற்றியையடுத்து தனது பேஸ்புக் வலைத்தளத்தில் “ மக்களை தொடர்ந்து ஏமாற்ற முடியாது“ என பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடு திரும்பும் கோத்தாபய ராஜபக்ச உடனடியாக கைது செய்யப்படுவார் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்தார்.

உள்ளூராட்சித் தேர்தலில் ஆளும் கட்சிகள் பலத்த பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், அரசுக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதால், நாடு திரும்பும் கோத்தாபய ராஜபக்ச கைது செய்யப்படுவது சந்தேகமே என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post Top Ad

Your Ad Spot

Pages