பஸ் கொள்வனவுத்திட்ட நிதிக்கு சகோதரர் சலாம் ஊடாக கட்டார் தனவந்தர் நிதியுதவி - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

பஸ் கொள்வனவுத்திட்ட நிதிக்கு சகோதரர் சலாம் ஊடாக கட்டார் தனவந்தர் நிதியுதவி

Share This


ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் கட்டார் பழைய மாணவர் சங்க கிளையினர் பஸ் கொள்வனவுத் திட்ட நிதி சேகரிப்பு தொடர்பில் அண்மையில் மேற்கொண்ட சந்திப்பின் பயனாக சகோதரர் முஹம்மது இஸ்மாயீல் சலாம் அவர்கள் தான் பணி புரியும் அல் நாயில் கார் சேல் நிறுவன பொது முகாமையாளர் அஹ்மத் சயீட் பஜூபையிர் அவர்களிடமிருந்து சுமார் 83000 இலங்கை ரூபாய்களை பெற்றுத்தந்துள்ளார்.

அவருக்கும் உதவியளித்த நிறுவன உரிமையாளருக்கும் கட்டார் பழைய மாணவர் சங்க கிளை சார்பாகவும் ஓட்டமாவடி தேசிய பாடசாலை சமூகம் சார்பாகவும் மனப்பூர்வமாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

கடந்த 26.01.2018 ம் திகதி வெள்ளிக்கிழமை கட்டாரிலுள்ள எமது சகோதரர்களை ஒன்றிணைத்து லக்பிம உணவகத்தில் இராப்போசனத்துடன் லக்பிம உணவகத்தில் விசேட கலந்துரையாடலொன்றை நாம் ஏற்பாடு செய்து எமது திட்டம் தொடர்பிலும் இதுவரையுள்ள எமது அடைவுகள் தொடர்பிலும் எம்மால் சேகரிக்கப்பட்டுள்ள சுமார் 18 இலட்சம் ரூபாய்களுடன் மீதியாகத் தேவைப்படும் நிதியினை சேகரித்துக் கொள்ள நாம் மேற்கொண்டு வரும் முன்னெடுப்புக்கள் தொடர்பிலும் பூரண விளக்கமொன்றை வழங்கியிருந்தோம்.
அக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட நல்லுள்ளம் கொண்ட எமது சகோதரர்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்திருந்ததுடன், தங்களாலான பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி மீதியாகத் தேவைப்படும் நிதியினைச் சேகரித்துக் கொள்ள உதவுவதாக வாக்குறுதியளித்து எம்மால் குறித்த கலந்துரையாடலில் வழங்கப்பட்ட கையேடுககளை பெற்றுக் கொண்டிருந்தனர்.

அதன் மூலம் சகோதரர் சலாம் அவர்கள் செய்த பாரிய முயற்சியினூடாக மேற்குறித்த நிதியினை அவரால் எமக்கு பெற்றுத்தர முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதுமாத்திரமல்லாமல், மேலும் சில சகோதரர்கள் தமது முயற்சிகளை மேற்கொண்டு வருவது எமக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே, எம்மால் வழங்கப்பட்ட கையேடுகளைப் பெற்றுக்கொண்ட எமது சகோதரர்களும் தங்களாலான முயற்சிகளை மேற்கொண்டு முடிந்த நிதிகளை சேகரித்து எமது திட்டத்தை குறித்த காலப்பகுதிக்குள் நிறைவுக்கு கொண்டு வர உதவி ஒத்தாசை புரியுமாறு வினயமாகக் கேட்டுக்கொள்கிறோம்.
சகோதரர் சலாம் ஊடாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட நிதி உடனடியாக பஸ் கொள்வனவுத்திட்ட கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதுடன், இதுவரை மொத்த மீதி இருப்பாக 1,883,026.63 இலங்கை ரூபாய் கணக்கில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. (பற்றுச்சீட்டுக்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது)

அதே நேரம் பஸ் கொள்வனவுத்திட்ட நிதி சேகரிப்பை குறித்த காலப்பகுதிக்குள் நிறைவு செய்யும் நோக்குடன் நாம் முன்னெடுத்து வரும் திட்டத்திற்கு உதவும் உள்ளங்கள் கீழேயுள்ள எமது பஸ் கொள்வனவு கணக்கில் தங்களால் முடிந்த பணதொகைகளை வைப்பிலிட்டு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE