தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Feb 13, 2018

Breaking News>>> அட்டாளைச்சேனையில் யார் ஆட்சியமைப்பார்கள் விபரம் உள்ளே!கொழும்பிலிருந்து சிலோன் முஸ்லிம் செய்தியாளர் நௌசாத்

அட்டாளைச்சேனை பிரதேச சபை ஆட்சியை யார் அமைப்பது அதில் யார் தவிசாளர் என்ற தொங்கு நிலை இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இந்த நிலையில் இதற்கான பதிலை கொழும்பு வட்டாரங்கள் சற்று முன்னர் வெளியிட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி அரசு அமைக்கப்படவுள்ளது, அதில் பங்காளியாக இருக்கும் எல்லாக் கட்சிகளையும் ஒன்றிணைந்து உள்ளுராட்சி சபைகளை ஆட்சியமைக்குமாறு பிரதமர் ரணில் பணித்துள்ளார்.

அதனடிப்படையில் முஸ்லிம்காங்கிரஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், நல்லாட்சி்க்கான மக்கள் முன்னணி ஆகியவை முஸ்லிம் சபைகளை கூட்டாக இணைந்து ஆட்சியமைக்கவுள்ளது.

மேற்சொன்ன விடயத்திற்கு அமைய  முஸ்லிம்காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சேர்ந்து அட்டாளைச்சேனையில் ஆட்சியமைக்கவுள்ளது. ஐக்கிய சமாதான கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட எவரும் வரப்போவதில்லை (அன்சில் உள்ளிட்ட சிலர்) ஆனால் மயில் கட்சியின் விகிதாசார உறுப்பினர்கள் கட்சியினால் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் மு.காவுடன் இணையவுள்ளனர்.

உண்மையில் இந்த ஆட்சி ஐக்கிய தேசியக்கே வெற்றி, அந்த வெற்றியையே ரணில் விரும்புவார். அதற்காக கொழும்பு வட்டாரங்கள் செயற்பட்டு கொண்டிருக்கிறது.

Post Top Ad

Your Ad Spot

Pages