Feb 14, 2018

தேர்தல் வன்முறைகளை இனவாதமாக சித்தரிக்க வேண்டாம் ; நாமல் ராஜபக்‌ஷ MPதேர்தலின் பின்னர்  இடம்பெற்ற சில மோதல் சம்பவங்களின்  பழிகளைஎங்கள்மீது சுமத்திநாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்கள் பாதிக்கப்படுவார்கள்போன்ற  விம்பங்களை சமூக ஊடகங்கள் வாயிலாக தோற்றுவிக்காமல்நல்லாட்சிஆதரவாளர்கள் நேர்மையான அரசியல் செய்ய முன் வர வேண்டுமெனஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ   தெரவித்தார்.

அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாங்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நேர்மையான முறையில்தோற்கடிக்கப்படவில்லைமக்களிடம் பொய்களை கூறியும்சூழ்ச்சிகள் செய்தும்தோற்கடிக்கப்பட்டிருந்தோம்.அவ்வாறு அவர்கள் செய்ததற்கானதண்டனையைஇத்  தேர்தலில் மக்கள் அளித்துள்ள வாக்குகள் மூலம்பெற்றுக்கொண்டுள்ளனர்

இத் தேர்தலில் எங்கள் கட்சியானது மூவின மக்களினதும் ஆதரவை பெற்றிருந்தது.எமக்கு கிடைத்துள்ள ஆதரவை எப்படி எதிர்கொள்வதென,நல்லாட்சி அரசினர்தினறிக்கொண்டிருக்கின்றனர்மீண்டும் பொய்களைசூழ்ச்சிகளையும் கையில்ஏந்தியுள்ளார்களா என்ற அச்சம் தோன்றுகிறது.

ஒரு தேர்தலை தொடந்து வன்முறைகள் இடம்பெறுவது வழக்கம்அந்த வகையில்பல இடங்களில் வன்முறைகள் இடம்பெற்றுள்ளனஎங்களுடைய கட்சி தேர்தல்செயற்பாடுகளுக்குதனது வர்த்தக நிலையத்தை தந்தார் என்பதற்காக,உலப்பனையில் ஒரு முஸ்லிம் வர்த்தகரின் கடை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது

பேருவளையை சேர்ந்தஎங்களுடைய குடும்ப நண்பரும்கூட்டு எதிர்க்கட்சியின்முஸ்லிம் முற்போக்கு முன்னனியின் முக்கியஸ்தர் அஸாப் அஹமட்,பேருவளை .தே. அமைப்பாளரான இப்திகார் ஜெமீலின் சகோதரரால்கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்

இது போன்ற ஏராளமான வன்முறைச் சம்பவங்கள்எங்களை ஆதரிக்கும்முஸ்லிம்களுக்கு எதிராக நடந்தேறியுள்ளதுஇதன் காரணமாக எங்களதுகட்சியுடன் வெளிப்படையாக இணைந்து செயல்பட முஸ்லிம்கள் அஞ்சுகின்றனர்.

இவற்றை கண்டிக்கவோவெளிப்படுத்தி ஆதரவு தேடவோ யாருமில்லை.ஒரிருஇடத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற சம்பவங்களைஎங்களோடுதொடர்புபடுத்திநாங்கள் ஆட்சிக்கு வந்தால்முஸ்லிம்கள் பாதிக்கப்படுவார்கள்என்ற விம்பத்தை ஏற்படுத்த சிலர் முனைகிறார்கள்

இவர்களதுஎங்கள் மீதான இவ்வாறான குற்றச் சாட்டுக்களுக்கு இலங்கைமுஸ்லிம்கள் சமூக வலைத்தளங்களில்எங்களுக்கு சாதகமான வகையில் கருத்துதெரிவித்துள்ளமை மகிழ்ச்சியளிக்கின்ற போதும்,இந்த சதி வலைக்குள்முஸ்லிம்களில் உள்ள சில முக்கிய புள்ளிகள் அகப்பட்டுள்ளமை கவலைதருகிறது

மீண்டும் சூழ்ச்சிகளை செய்து ஆட்சியை தக்க வைக்க முயற்சிக்காது,நேர்மையான முறையில் ஆட்சியை தக்க வைக்க முன் வர வேண்டும்.நேர்மையான முறையில் செய்யப்படும் முயற்சியேநீண்ட காலம் நிலைத்திருக்கசெய்யும் என வர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network