மெனிக்கின்னயை சுற்றிவளைத்த 400 காடையர்கள், 7 பேரே கைது!
கண்டி- மெனிக்கின்ன பிரதேசத்தில் நேற்று இரவு குழப்பம் விளைவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட 7 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவங்களின்  போது, 3 பொலிஸாரும் காயமடைந்து மெனிக்கின்ன வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இதன்போது வானத்தை நோக்கி சுட்டுள்ளனர். கண்டு நிர்வாக மாவட்டத்துக்குள் ஊரடங்கு சட்டம் அதுமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மெனிக்கின்ன பகுதியில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக ​தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 400 பேர் கொண்ட குழுவினர் குறித்த பிரதேசத்தில் குழப்பம் விளைவிக்கும் செயற்பாட்டை மேற்கொண்டதாகவும், இதன்போது பொலிஸார் வானத்தை  நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும்,தகவல்கள் தெரிவித்துள்ளன.
Share on Google Plus

About NEWS

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment