தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Mar 3, 2018

மட்டக்களப்பில் சுனாமி முன்னெச்சரிக்கை கருவி திடீரென கரையொதுங்கியுள்ளது!வாகரை காயான்கேணி, ஆணைக்கல் கடற்கரையில் ஆழ்கடல் நிலநடுக்கத்தை அளவிடும் சுனாமி முன்னெச்சரிக்கை கருவி திடீரென கரையொதுங்கியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் தெரிவித்தார்.

சர்வதேச ஆழ்கடல் பகுதியில் இடம்பெறும் நிலநடுக்கத்தை அளவிட்டு, அதனை சுனாமி முன்னெச்சரிக்கை நிலையத்திற்கு தகவல் வழங்கும் மிதக்கும் “வோயா” எனப்படும் குறித்த கருவி நேற்று கரை ஒதுங்கியுள்ளது.

கரை ஒதுங்கிய வோயாவில் அன்டனா மற்றும் பல்வேறு உபகரணங்கள் தென்பட்டதாகவும், தற்போது அவற்றில் எந்தவித உபகரணமும் இல்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த முன்னெச்சரிக்கை கருவியானது சர்வதேச ஆழ்கடல் பகுதியில் இருந்து வந்திருக்கலாம் எனவும், இந்த வோயாவை கடற்படை அதிகாரிகளின் உதவியுடன் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும் இதில் இருந்து திருடப்பட்டதாக கூறப்படும் பொருட்கள் தொடர்பாக வாகரை பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவியாளர் ஏ.எம்.எம்.ஹசீர் தெரிவித்தார்.

Post Top Ad

Your Ad Spot

Pages