தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Mar 23, 2018

உடல் ஆரோக்கியம் மற்றும் தேசிய விளையாட்டு நிகழ்வுகள் நாளை அட்டாளைச்சேனையில்பைஷல் இஸ்மாயில் 

அதிமேதகு ஜனாதிபதியின் வழிகாட்டலில் கீழ் விளையாட்டுத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்படும் உடல் ஆரோக்கியம் மற்றும் தேசிய விளையாட்டு வாரத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிலும் இடம்பெற்று வருவதாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் தெரிவித்தார்.

இந்த விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வு நாளை (24) சனிக்கிழமை காலை 7.30 மணி தொடர்க்கம் 6.00 மணிவரை இடம்பெறவுள்ளதாகவும், இந்தப்போட்டிகள் 7 அங்கங்களாக பிரிக்கப்பட்டு நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.

திணைக்களங்களில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்குள் இடம்பெறுகின்ற  இந்த விளையாட்டுப் இப்போட்டி நிகழ்ச்சிகள் யாவும் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலை மைதானத்தில் இடம்பெறவுள்ளதாகவும் முதலாவது நிகழ்வாக நடைபவனி மற்றும் உடற்பயிற்சி காலை 7.30 மணிக்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலக முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு ஆசிரியர் பயிற்சி கலாசாலை மைதானம் வரை சென்றடைந்து அங்கு இடம்பெறுகின்ற உடற்பயிற்சியிலும் கலந்துகொள்ளவுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து 8.30 மணி தொடர்க்கம் 2.00 மணிவரை திணைக்கள ரீதியாக கிரிக்கட் சுற்றுத் தொடர் இடம்பெறவுள்ளதாகவும், 2.30 மணி தொடர்க்கம் 3.30 மணிவரை கிரிக்கட் சுற்றின் இறுதிப்போட்டி இடம்பெறவுள்ளது.

மேலும், 3.30 மணி தொடர்க்கம் 4.30 மணிவரை பிரதேச செயலக அணிக்கும், தென்கிழக்கு பல்கழைக்கழக அணிக்கும் இடையிலாளான உதைப்பந்தாட்டப் போட்டி இடம்பெறவுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து 4.30 மணி தொடர்க்கம் 5.00 மணிவரை திணைக்கள ரீதியான கயிறுழுத்தல் போட்டியும் இறுதி நிகழ்வாக பரிசளிப்பு இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post Top Ad

Your Ad Spot

Pages