தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Mar 15, 2018

களுக்கல வித்தியாலயத்தில் நடைபெற்ற புதிய கட்டிட திறப்பு விழாவில் விசேட அதிதியாக இஷாக் ரஹுமான்

இலங்கையில் வாழும் 6 வயதை தாண்டிய அனைத்து மாணவர்களுக்கும் இலவசக்கல்வியை கற்கும் உரிமை உண்டு. அனுராதபுர மாவட்டத்தில் இவ்விலவசக்கல்வியின் தரமானது குன்றிய நிலையிலேயே காணப்படுகின்றது. இந்நிலை மாற்றப்பட்டு சரியான தரத்தில் அனுராதபுர மாவட்ட மாணவர்களுக்கு இலவசக்கல்வி வழங்கப்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தெரிவித்தார்.

அனுராதபுரம் களுக்கல பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள அ/களுக்கல வித்தியாலயத்தில் நடைபெற்ற புதிய கட்டிட திறப்பு விழாவில் விசேட அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதை தெரிவித்தார்.

அத்தோடு அப்பாடசாலையின் குறை நிறைகளை கண்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்குமாறும் அன்றைய நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட நீர்ப்பாசன துறை அமைச்சர் விஜித் விஜேமுனி சொய்ஸா அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அஸீம் கிலாப்தீன்   

Post Top Ad

Your Ad Spot

Pages