Mar 11, 2018

புலம்பெயர் முஸ்லிம்களின் அமைதியான கவன ஈர்ப்புப் பேரணி


லண்டனிலிருந்து மீரா அலி ரஜாய்
இலங்கையில் இடம் பெற்ற இன ஒதுக்கல் நடவடிக்கைகளைக் கண்டிது புலம் பெயர் முஸ்லிம்களினால் இன்று லண்டன் நேரப்படி நணபகல் 12.00மணியயவில் இலக்கம் 10. டவுனிங் வீதியிலுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு முன்பாகவும் பி.பகல் 03.30 மணியளவில் ஹைட் பார்க் கார்டனில் அமைந்துள்ள இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவராலயத்துக்கு முன்பாகவும் அமைதியான கவனயீர்ப்பப் போராட்டமொன்றை இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் குடியேறியுள்ள முஸ்லிம்களின் அமைப்பின் ஏற்பாட்டில் கவன ஈர்ப்புப் பேரணியொன்று ஏறபாடு செய்யப்பட்டுள்ளது.(லண்டன் நேரம்12.00) இலங்கையில் பிற்பகல் 05.30 மணி ஆகும்.

இலங்கையில் கடந்த ஓரிரு வாரங்களாக இடம் பெற்ற இன ஒதுக்கல் நடவடிக்கைகளின் முன்னெடுப்புக்களான முஸ்லிம் உயிர்களைக் காவு கொள்ளல் முஸ்லிம்களின் இரத்தத்தை சிந்தச் செய்தல்  பள்ளிவாசல்களுக்கு தீ மூட்டி எரித்தல். மற்றும் சேதப்படுத்தல். இறைவேதமான அல் குர்ஆன் பிரதிகளையும் எரித்தல் எமது உடன் பிறப்புக்களின் வீடுகள் பொருளாதார மையங்கள் வியாபாரத் தலங்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல்.போன்ற காரணிகளைக் கண்டிப்பதுடன் மேற் கூறக்கட்ட பாதகமான காரியங்களைச் செய்த மதகுருமார் என்ற போர்வைக்குள் வாழும் காடையர்களையும் இன விரிசலைத் தூண்டி அதில் குளிர்காயும் இனவாத மூலோபாய அரசியல் வாதிகளையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அம்பாரையில் உள்ள ஹோட்லுக்கு மாட்டிறைச்சி போட்ட கொத்து றொட்டி தின்னப்கோன நாட்டுப்புற காடையர்களின் செயற்பாடுகளையும் ஏனைய மூன்று கடைகளையும் பள்ளியையும் உடைக்கும் போது கை கட்டி வேடிக்கை பாரத்;து நின்ற அரசின் சீருடை அணிந்த கூலிப் படைகளையும்
இதனையடுத்து கண்டி மாவட்டத்தில் தெல்தெனிய. திகன. மெனிக்ஹின்ன கட்டுகஸ்தோட்ட குருணாகல வீதியிலுள்ள 4ம் கட்டைக்கான மடவளை அக்குரணை போன்ற பிரதேசங்களில் பள்ளிவாசல் மற்றும் 50 க்கு மேற்பட்ட கடைகளக்குத் தீ வைத்து கோடிக ;கணக்கான சொத்துக்களை சேதப்படுத்தியமை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட உள்ளுர் வெளியூர் பேரின வாதிகளையும்  எமது அமைப்பு வன்மையாகக் கண்டிப்பதுடன் சட்டத்தையும் நீதியையும் நிலை நாட்ட வேண்டிய பொலிஸ் துறைக்குப் பொறுப்பான அமைச்சரும் பிரதமருமான ரணிலின் செயற்பாடு அவருடைய உறவினரான ஜே .ஆரின் எச்சங்களைக் கொண்டிருப்பதையும் நாம் கண்டிக்கின்றோம்.

என்று தத்தமது கருத்துக்களைக் கூறி ஆரப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சுலோ அட்டைகளையும் பதாதைகளையும் ஏந்திய மக்கள் கோஷங்களையும் எழுப்பிய வண்ணம் டவுனிங் வீதியூடாக பயணித்த மக்கள் அமைதிப் பேரணி ஹைட் பார்க் காடனில் அமைந்துள்ள இலங்கை தூதுவராலயத்தின் முன் கூடியது.SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network