Header Ads

ad728
  • Breaking News

    நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஐ.தே.க தீர்மானம்!


    பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்து குறித்த பிரேரணையை தோற்கடிக்க ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.
    குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார உள்ளிட்ட உறுப்பினர்களும் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
    இதேவேளை நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமர் வெற்றி பெற்றதன் பின்னர் ஏப்ரல் 5ம் திகதியிலிருந்து ஓரிரு நாட்களில் கட்சியில் மாற்றங்கள் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
    ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று கட்சித்தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728