தேசிய ரீதியில் ஆரம்பப் பிரிவு பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு விழா கண்டி போகம்பர விளையாட்டு மைதானத்தில் இன்று சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இதில் காத்தான்குடி மத்தி கல்வி வலயத்திலிருந்து பங்கேற்கும் ஒரே ஒரு பாடசாலையான ஜாமிஊழ்ழாபிரீன் வித்தியாலய மாணவர்களை நேற்று வெள்ளிக்கிழமை மாலை சந்தித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தனது வாழ்த்துக்களையும்- பாராட்டுக்களையும் தெரிவித்தார். 

நாடளாவிய ரீதியிலிருந்து 98 ஆரம்ப பாடசாலைகள் கலந்து கொள்ளும் இவ் விளையாட்டு நிகழ்வில் காத்தான்குடி மத்தி கல்வி வலயத்திலிருந்து காத்தான்குடி ஜாமிஉழ்ழாபிரீன் வித்தியாலயம் மாத்திரமே இரண்டாவது முறையாகவும் இந் நிகழ்வில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளது. 

நேற்று  வெள்ளிக்கிழமை பிற்பகல் ஜாமிஉழ்ழாபிரீன் வித்தியாலய மாணவர்களை பாடசாலை வளாகத்தில் சந்தித்த இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Share The News

Post A Comment: