ஜனாதிபதிக்கு எதிராக சுமனரத்ன தேரர் கறுப்புக் கொடி! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

ஜனாதிபதிக்கு எதிராக சுமனரத்ன தேரர் கறுப்புக் கொடி!

Share This

மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனதேரர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மட்டக்களப்பு வரவிருக்கின்ற நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கறுப்புக்கொடி கட்டி நேற்று (2) மாலை போராட்டம் நடாத்தினார்.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 385 பட்டதாரிகளுக்கான ஆசிரிய நியமனங்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் மட்டக்களப்பு சனிக்கிழமை (3)வெபர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

அடுத்து மட்டக்களப்பு வருகை தரவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நடைபெறவுள்ள பூஜை வழிபாடுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நடைபெறவுள்ள பூஜை வழிபாடுகளில் கலந்துகொள்ளவுள்ள ஜனாதிபதி மட்டக்களப்பில் உள்ள பௌத்த விகாரை , கிறிஸ்தவ தேவாலயம் , பள்ளிவாசல் ஆகியவற்குக்கு செல்ல வேண்டும் அவ்வாறு செல்லாமல் அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு மட்டும் செல்வாரானால் அதனை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் , இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று எதிர்ப்பு நடவடிக்கையினை மேற்கொள்வதாகவும் தெரிவித்து நேற்று மாலை மட்டக்களப்பில் உள்ள மங்களராம விகாரை வாசல் கோபுரத்தில் ஏறி கருப்பு கொடியினை பறக்கவிட்டு விகாராதிபதி அம்பிட்டிய சுமனதேரர் எதிர்ப்பினை தெரிவித்தார்.


pik pik.JPG2.JPG3 pik.JPG2.JPG3.JPG4

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE