தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Mar 9, 2018

குத்பா மேடைகள் நமக்கு கிடைத்த பெரிய அமானிதமாகும்.
அன்றாடம் எம்மை சுற்றி நடக்கும் சாதக பாதகங்களை வாரந்தோரம் அலசி, அவற்றுக்கான தீர்வை தேடுவதற்காக பயன்படுத்த உருவாக்கிய குத்பா மேடைகள் நமக்கு கிடைத்த பெரிய அமானிதமாகும்.

இந்த அமானிதம் பேணுவதில் ஆலிம்களும் பள்ளி நிர்வாகத்தினரும் தவறி வருவதாகவே சமீப கால கொத்பா பிரசங்கங்கள் உணர்த்துகிறது. கண்டி டவுனில் ஒரு பள்ளிவாசலில் மிம்பருக்கு அருகே வரிசைக்கு சுமார் 20 பேர் அமர்ந்திருந்தார்கள்.

கொத்பா நேரத்தில் மூன்று வரிசையை எண்ணிப் பார்த்ததில் சுமார் 24 பேர் தூங்குவதை அவதானித்தேன் .. கொத்பாக்கள் கருப்பொருள் காணாமல் போன, வீரியமற்ற பிரசங்கங்களாக மாறி வெறும் 40 நிமிடத்தை கடக்க உளறிக் கொட்டும் இடமாக மாறிவருகிறது ..

கொத்பா மேடைகள் சமூகத்தை மோட்டிவேட் பண்ணும் தளமாக பாவிக்காத வரை பல அம்பாறை, திகன சம்பவங்கள் நடந்தாலும் திருந்த மாட்டோம்!

கிடைத்த எல்லா நிஃமத்துகளையும் வீணாக்கியதன் பிரதிபலனை எல்லை கடந்து அனுபவித்து வருகிறோம்,? இந்த மேடைகள் வெறும் அலங்காரமாக மாறியதன் விளைவு? காடு மேடுகளில் தூக்கமின்றி எமது இளைய தலைமுறை !

எப்போது திருந்தப்போகிறோம்?

- ரிஸ்வான் ஷஹீத்-

Post Top Ad

Your Ad Spot

Pages