திகன சிங்கள இளைஞன் எப்படி உயிரிழந்தான்; முழுவிவரம் இணைப்பு - முஸ்லிம்கள் மீது தவறு - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

திகன சிங்கள இளைஞன் எப்படி உயிரிழந்தான்; முழுவிவரம் இணைப்பு - முஸ்லிம்கள் மீது தவறு

Share This


திகன, தெல்தெனிய, மெதமஹநுவர சம்பவத்தில அடித்துக் கொல்லப்பட்ட சிங்கள இளைஞனின்,
தந்தை சீனி நோயால் காலை இழந்தவர்.

தாய் பாரிசவாதத்தால் முடக்கப்பட்டவர்.
தங்கை குடும்ப சூழலால் மனநோயாளியானவர்.
வறுமையான குடும்பம்.
குடும்ப சூழல் அவனை 24 மணிநேர உழைப்பாளியாக்கி இருந்தது.
பொதுப் போக்குவரத்து குறைந்த பிரதேசமாகையால் சில நேரங்களில் பள்ளி ஜமாத்தாரை தனது லொறியில் பிரதான பாதைக்கு இலவசமாக ஏற்றிச் செல்வான்.
உழைப்பின் நிமித்தம் நள்ளிரவு நேரம் அவனுடைய லொறியை பின்நோக்கி நகர்த்தும் போது நிறுத்தியிருந்த முச்சக்கர வண்டியின் 160/= ரூபாய் பெறுமதியான பக்கவாட்டு கண்ணாடி உடைந்து விடுகிறது.
அருகிலே சாராயம் குடித்துக் கொண்டு இன்பமாக இருந்த முச்சக்கரவண்டியின் முஸ்லிம் உரிமையாளரும் அவரின் நண்பர்களும் இதனைக் கண்டு விடுகிறார்கள். கண்ணாடி இருந்த மாதிரி அப்படியே இருக்க வேண்டும் என்று சண்டைக்கு வருகிறார்கள். .இந்த நடு இரவில் கண்ணாடி எடுக்க நான் எங்கே போவது? விடிந்தவுடன் திருத்தித் தருகிறேன். அல்லது இதோ 1000 ரூபா தருகிறேன் கண்ணாடியைப் போட்டுவிட்டு மீதியைத் தாருங்கள் அல்லது எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறான். ஆனாலும் துரத்திப் பிடித்து அடித்ததில் படுகாயத்திற்கு ஆளானான்.
பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான், முடிந்தவர்கள் இக்குடும்பத்திற்கு உதவலாம்!

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE